ரயில் டிக்கெட், பான் கார்டு.. இன்று முதல் மொத்தமாக மாறும் ரூல்ஸ்.. மக்களே இது தெரியாமல் இருக்காதீங்க
சென்னை: ஏப்ரல் 1 புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில் இன்று முதல் நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களில் விதிகள் மாற உள்ளன. குறிப்பாக டோல்கேட்களில் இன்று முதல் ரொக்கமாக பணம் செலுத்த முடியாது.. பான் கார்டு விண்ணப்பிக்க கூடுதல் சான்றிதழ்கள், வங்கி விதிகள், புதிய தொழிலாளர் சட்டம் என பல விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பாஸ்டேக் வருடாந்திர கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 60 சுங்கசாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வருடாந்திர பாஸ் கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3075 ஆக உயர்ந்துள்ளது.

பான் கார்டு ரூல்ஸ்:
பான் கார்டு விண்ணப்பிக்க இனி ஆதார் மட்டும் போதாது. இனி பான் கார்டு விண்ணப்பிக்க அடையாளம் மற்றும் வயது சான்றுக்குக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பள்ளி சான்றிதழ் உள்ளிட்டவைகளை சமர்பிக்க வேண்டியிருக்கும்.
வங்கி ரூல்ஸ்:
ஹெச்.டி.எப்.சி வங்கி, ஏப்ரல் 1, 2026 முதல் யுபிஐ பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுத்து வந்ததை இலவசம் என்பதை மாற்றி, தனது இலவச வரம்பில் சேர்க்க உள்ளது. இதன்படி இனி யுபிஐ வழியாக பணம் எடுத்தாலும் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். முதல் ஐந்து பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.
பந்தன் வங்கி, பெருநகரங்களில் மூன்று இலவசப் பரிவர்த்தனைகளையும், பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளையும் வழங்கும். இதற்கு மேல், ரூ.23 கட்டணமும், தோல்வியுற்ற பரிவர்த்தனைகளுக்கு ரூ.25 கட்டணமும் வசூலிக்கப்படும்.
வங்கிக் கட்டணங்கள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விதிகளில் மாற்றங்கள் வருகின்றன. யுபிஐ, கார்டு அல்லது வாலட் மூலம் பணம் செலுத்தும் போது பாதுகாப்பு இனி ஓடிபி (OTP) மட்டும் போதாது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு சரிபார்ப்பு (Two-factor authentication) கட்டாயமாக்கப்படுகிறது.
புது வருமான வரி சட்டம்
இன்று முதல் 1961 வருமான வரி சட்டத்துக்கு பதிலாக, புதிய வருமான வரிச் சட்டம் 2025 நடைமுறைக்கு வருகிறது. தணிக்கை செய்ய தேவையில்லாத வரி செலுத்துவோர், தங்கள் ITR-3 மற்றும் ITR-4 படிவங்களை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தாக்கல் செய்ய முடியும்.
புதிய தொழிலாளர் சட்டம்
இன்று முதல் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி நிறுவனங்கள், ஒருவரின் மொத்த ஊதியத்தில் (CTC) குறைந்தது 50% அடிப்படைச் ஊதியமாக வைக்க வேண்டும். இதனால் பி.எஃப் & பணிக்கொடை தொகையும் கணிசமாக அதிகரிக்கும். ஆனால், கையில் வாங்கும் மாத ஊதியம் குறைய வாய்ப்பு உள்ளது.
ரயில்வே டிக்கெட் ரத்து
ரயில் பயணிகளுக்கான டிக்கெட் ரத்து விதிகளிலும் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் ரயில் புறப்படுவதற்கு 8 முதல் 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீத தொகை திரும்பக் கிடைக்கும். இதுவே 24 முதல் 72 மணி நேரத்திற்குள் செய்தால் 75 சதவீத தொகை திரும்பக் கிடைக்கும். 72 மணி நேரத்துக்கு முன்பு ரத்து செய்தால் அதிகபட்ச ரீஃபண்ட் வழங்கப்படும் என கூற்பபட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications