HRA டூ கல்வி - ஹாஸ்டல் செலவு வரை வரி சலுகை.. ஏப். 1 முதல், புதிய வருமான வரி விதியில் 7 மேஜர் மாற்றம்
சென்னை: நம் நாட்டில் 1952ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டத்துக்கு பதில் புதிய வருமான வரி விதிகள் 2026 (New Income Tax Rules 2026) கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய வருமான வரி விதிகளின்படி பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்போர் முதல் இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர் குழந்தைகளின் கல்வி, ஹாஸ்டல் செலவை காண்பித்து கூடுதல் வரிச்சலுகைகளை பெறலாம். அதன்படி புதிதாக வர உள்ள 7 மேஜர் மாற்றங்களை இங்கு பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆங்கிலேயர் கால சட்டங்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த சட்டங்களை நீக்கி புதிதாக திருத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில், பழமையான வருமான வரி சட்டம் 1961யை மாற்றும் வகையில் புதிய வருமான வரிச்சட்ட மசோதா 2025 கொண்டு வரப்பட்டது. இருசபைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அது சட்டமாக்கப்பட்டது.

இந்த சட்டத்திற்கான புதிய வருமான வரி விதிகள் 2026 (New Income Tax Rules 2026) வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மத்திய நேரடி வரி வாரியம் நேற்று வெளியிட்டது. இது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
திருத்தம் ஏன்?
நம் நாட்டில் 1952ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டத்துக்கு பதிலாக சட்டத்தில் புதிய வருமான வரி சட்டம் 2026 கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் நோக்கம் னெ்பது வரி செலுத்தும் முறையில் உள்ள குழப்பங்களை போக்குவதாகும். எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் பிரிவுகள் சுருக்கப்பட்டுள்ளது. கடினமான வார்த்தைகளும் நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி 800 பிரிவுகளை கொண்டிருந்த வருமான வரி சட்டம் 536 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபால் 47 சாப்டர்கள் 23 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வருமான வரி தாக்கல் செய்யும்போது AY (Assessment Year), FY (Financial Year) என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படும். இனி அந்த குழப்பம் ஏற்படாது. AY, FY என்பது நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக Tax Year என்ற வார்த்தை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய வருமான வரி விதிகளின்படி தற்போது இருக்கும் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் வரி விலக்கு வாங்கும் விஷயங்களில் சில மாற்றங்கள் கொண்டு் வரப்பட்டுள்ளன. அதன்படி 7 முக்கிய சாராம்சங்களை இங்கு புரியும்படி பார்க்கலாம்.
HRA-வில் மாற்றம்
வீட்டு வாடகையை குறிப்பிட்ட வரி விலக்கு பெறுவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. HRA or House Rent Allowance பொருந்தும் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது பெரிய பெரிய நகரங்களில் வாடகை வீட்டில் வசிப்போர் எச்ஆர்ஏ வழியாக பயன்பெறலாம். அதன்படி மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்போரின் மாத அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் வரை எச்ஆர்ஏ விலக்கு பெற முடியும்.
தற்போது வருமான வரி விதிகள் 2026 சட்டத்தின்படி இந்த பட்டியலில் புதிய நகரங்களாக ஹைதராபாத், பெங்களூர் இணைக்கப்பட்டுள்ளது. இனி ஹைதராபாத், பெங்களூர் நகரில் உள்ளவர்கள் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் வரை எச்ஆர்ஏ வழியாக வரி விலக்கு பெற முடியும். மற்ற நகரங்களில் உள்ளவர்கள் அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் வரை எச்ஆர்ஏ விலக்கு தொடரும். இது பழைய வருமான வரி முறையில் (Old Tax Regime) இருப்போருக்கு மட்டுமே பொருந்தும். புதிய வருமான வரி முறையில் இருப்போருக்கு பொருந்தாது.
கல்வி படி சலுகை
அதேபோல் குழந்தைகளுக்கான கல்வி அலோவன்ஸ் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு குழந்தைக்கு மாதம் 100 ரூபாய் என்று இருந்த கல்வி படி (Education Allowance) சலுகை தற்போது 3,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு பொருந்தும். அதேபோல், ஹாஸ்டல்களில் தங்கி படிக்கும் குழந்தைகளின் செலவின் அடிப்படையிலான வரி சலுகை ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவும் 2 குழந்தைகளுக்கு பொருந்தும்.
காருக்கான வரியில்...
அதேபோல் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நிறுவனங்களே கார் வழங்கி இருக்கும். அப்படி நிறுவனங்களின் கார்களை வாங்கி பயன்படுத்தும்போது சிலர் டிரைவர் சம்பளம், எரிபொருள் செலவை ஏற்பார்கள். இந்த சூழலில் 1.6 லிட்டர் இன்ஜின் கார் என்றால் மாதத்துக்குரிய வரி மதிப்பு ரூ.1,500 ஆகவும், டிரைவர் இருந்தால் ரூ.3 ஆயிரம் வரையும் விலக்கு பெற முடியும். அதேவேளையில் 1.6 லிட்டர் இன்ஜின் கார் என்றால் மதத்ததுக்கு வரிக்கான மதிப்பு ரூ.2 ஆயிரம் வரையும், டிரைவர் இருந்தால் ரூ.3 ஆயிரம் வரையும் விலக்கு பெற முடியும்.
பணியாளர் - கேஸ் செலவு
தோட்டக்காரர்கள், தூய்மை பணியாளர்கள் அல்லது வாட்ச்மேன்களுக்கு வழங்கும் மாத சம்பளம் வரிக்குறிய வருமானமாக கருதப்படும். கேஸ், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவற்றுக்கு செலுத்தும் தொகையும் வரி கணக்கில் வரும்.
கிப்ட் கூப்பன் - வவுச்சர்கள்
தற்போது பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு கிப்ட் கூப்பன் அல்லது வவுச்சர்கள் வழங்கும் முறை உள்ளது. இதன் மதிப்பு நிதி ஆண்டில் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் சென்றால் வரி விதிக்கப்படும். அதேவேளையில் பணி நேரங்களில் வழங்கப்படும் உணஅவகள், பானங்கள் வவுச்சர்கள் வழியாக வழங்கப்படும்போது ஒரு வவுச்சருக்கான வரி விலக்கு ரூ.50ல் இருந்து ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது
ஆவணங்கள் கட்டாயம்
வருமான வரி விதிகள் 2026ன் படி Old Tax Regime முறையில் இருப்பவர்கள் பல்வேறு வரி விலக்குகளை பெறுவதற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி எச்ஆர்ஏ (HRA)வை பெறும்போது ராண்டில் செலுத்தப்பட்ட வாடகை தொகை ரூ.1 லட்சத்தை தாண்டியில் வீட்டில் ஒருவரின் பெயர், முகவரி பான் கார்டு விவரங்களை அளிக்க வேண்டும். அதோடு வீட்டு உரிமயைாளருடன் உள்ள உறவு முறையை தெரிவிக்க வேண்டும்.
பான் கார்டு பயன்பாடு
இனி 5 லட்ச ரூபாய்க்கு மேல் கார் போன்ற வாகனங்கள் வாங்கும்போது பான் கார்டு கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அசையா சொத்துக்கள் வாங்கும் போது 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் பான் கார்டு விபரங்களை அளிக்க வேண்டும். வருமான வரிக்கான படிவம் 16 இனி தேவையில்லை. படிவம் 130யை பயன்படுத்தலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications