மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை.. டிகிரி போதும்! 550 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 550 அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

நாட்டின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் உள்ளது. நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. நாடு முழுவதும் கிளைகளுடன் இயங்கி வரும் இந்த நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தில் ஆயிரக்கனக்காண ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

New India Assurance Recruitment 2026 550 Apprentice Vacancies for Graduates

இந்த நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 550 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்:

அப்ரெண்டீஸ் எனப்படும் 550 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எந்த மாநிலத்தில் உள்ள பணியிடத்திற்கு விண்ணபிக்கிறோமோ அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம்.

வயது வரம்பு:

21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 06.07.2026 தேதியிட்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.12,300 வழங்கப்படும்.

தேர்வு முறை:

ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் உள்ளூர் மொழித்தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.06.2026 முதல் 06.07.2026 வரை NIACL அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் 23.06.2026 ஆகும்.
விண்ணப்ப பதிவு முடியும் நாள் 06.07.2026 ஆகும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தேர்வு செய்யப்படுவோர் 1 ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தேர்வு நுழைவுச்சீட்டு தேர்வுக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். NIACL இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.newindia.co.in/ பக்கத்தில் உள்ள 'Careers' பிரிவின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+