அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமா? வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டை இரண்டு தாழ்வு பகுதிகள் தாக்கிவிட்டன. 2 வாரத்திற்கு ஒரு தாழ்வு பகுதி என்று கணக்கு வைத்து 4 வாரத்தில் இரண்டு தாழ்வு பகுதிகள் தாக்கி மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன.
அதிலும் அந்தமான் அருகே உருவான கடந்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னைக்கு அருகே காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ளது. இதனால் வங்கக்கடல் அருகே இருக்கும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் மழை பெய்து வருகிறது. சென்னை முதல் குமரி வரை விட்டு விட்டு பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. மழை கொஞ்சம் கொஞ்சமாக விட்டாலும் இன்னும் குறைந்தது இரண்டு நாட்களுக்கு இதன் தாக்கம் லேசாக இருக்கும்.

அடுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில்தான் வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கணக்குப்படி இந்த தாழ்வு பகுதி இன்றுதான் உருவாகி இருக்க வேண்டும். ஆனால் வங்கக்கடலில் நிலவிய குறைவான வெப்பநிலை காரணமாக இந்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நாளை உருவாக உள்ளது.

எங்கே
கணித்தபடியே தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது உருவான பின் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திரா நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து வலுப்பெறும் பட்சத்தில் ஆந்திராவை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்கும்.
Recommended Video

தாக்கும்
ஒருவேளை வலிமை அடையாமல் வலிமை குறைந்து நகர்ந்தால் வடதமிழ்நாட்டை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 72 மணி நேரத்திற்கு இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு குறைவு. அதன்பின் இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு லேசாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இப்போதைக்கு இது தமிழ்நாட்டை தாக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் போக போகவே இதன் சரியான பாதை கணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications