2031ல் அஜித் தான் முதல்வர்.. அவரால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்! அநமு கழகத்தினர் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குன்றத்தூரில் திரைப்பட நடிகர் அஜித்தை முன்னிறுத்தி "அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. 2031 - ல் அஜித் தான் முதலமைச்சர் எனவும், அவர் வந்தால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய அஜித் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

குன்றத்தூரில் திரைப்பட நடிகர் அஜித்தை முன்னிறுத்தி "அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி குன்றத்தூரில் நடைபெற்ற கட்சியின் முதல் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

Ajith kumar Political Party Ajith Fans

இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 அஜித் ரசிகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளை வரவேற்கும் வகையில், "நாளைய முதல்வரே... பதவியேற்க வா" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அஜித் அரசியல் கட்சி

மேலும், நடிகர் அஜித்தின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து, "நாளை முதல்வர் அஜித்" என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலத் தலைவர் டி. பாபு, கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியதுடன், "கார்" சின்னத்தை கட்சியின் சின்னமாக அறிவித்தார். பின்னர் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

முதல்வர் அஜித்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்," தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும், அதனை முற்றிலும் மாற்ற வேண்டும் என்றால் 2031ஆம் ஆண்டு நடிகர் அஜித் தமிழக முதல்வராக வேண்டும். மேலும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது, படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவது உள்ளிட்டவை கட்சியின் முக்கிய கொள்கைகள்.

புதிய அரசியல் கட்சி

விவசாயிகளுக்கு உரம், விதை, நெல் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை வாங்குவதற்காக, எந்தவித நிபந்தனைகளும் இன்றி வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். திரைத்துறையைத் தாண்டி நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ரசிகர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், குன்றத்தூரில் அஜித்தை முன்னிறுத்தி புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகம்

நடிகராக இருந்து தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய விஜய், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி இருக்கிறார். தொடர்ந்து அவரது ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த நிலையில், லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் இருவரும் ஒன்றாக பங்கேற்றது பேசுபொருளாக மாறியது.

அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் என கூறிக்கொண்டு சிலர் அஜித்துக்கு எதிராகவே பேசிய நிலையில் திடீரென கள்ளக்குறிச்சியில் கட்சி ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டது. தமிழக மக்கள் கழகம் என்ற பெயரில் கொடி அறிமுகமும் நடைபெற்றது. கட்சிக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநில பொதுச் செயலாளர் பதவியை அஜித்துக்காக வைத்திருக்கிறோம் எனவும், அவர் அரசியலுக்கு வந்தால் அந்த பதவியை அவருக்கு தருவோம் என அந்த கட்சி நிர்வாகிகள் கூறினர். இந்த நிலையில் அந்த கட்சிக்கு போட்டியாக தற்போது மேலும் ஒரு கட்சி உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+