லண்டன் ஸ்டைலில்.. சென்னை சாலையில் இது என்ன புதுசா ரெட் கலர்ல.. போலீஸ் களமிறக்கிய புது கார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சாலைகளில் நேற்று பல இடங்களில் புதிய சிவப்பு நிற போலீஸ் கார் தென்பட்டது. பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் இந்த கார்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சென்னை காவல்துறை தற்போது தமிழ்நாடு அரசு மூலம் சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் என்று மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கையில் சென்னை காவல்துறை 3ஆக பிரிக்கப்படும் என்று அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் மூலம் வெளியிடப்பட்டது.

திமுகவின் பல வருட கோரிக்கையான இதை, ஆட்சிக்கு வந்த முதல் கூட்ட தொடரிலேயே நிறைவேற்றி உள்ளது. நிர்வாக வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆணையர்கள்

ஆணையர்கள்

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளாக ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். தற்போது அவர்களே இரண்டு ஆணையரகத்திற்கும் கமிஷனர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்களாக முறையே ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கொள்முதல்

கொள்முதல்

இரண்டு புதிய ஆணையரகம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான கொள்முதல் பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு புதிய ஆணையரகத்திற்கும் புதிய ஆயுதங்கள், தற்காப்பு கவசங்கள், வாக்கி டாக்கிகள் வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய தரத்தில் இந்த பொருட்கள் வாங்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. முக்கியமாக போலீஸ் வாகனங்கள் புதிய தோற்றத்தோடு, அதிக வசதிகள் இருக்கும் வகையில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகம்

தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகம்

அந்த வகையில் ஆவடி, தாமபுரம் காவல் ஆணையகரத்திற்கு வாங்கப்பட்ட புதிய போலீஸ் ஜீப்கள் நேற்று சென்னை சாலைகளில் தென்பட்டது. எப்போதும் சென்னையில் காணப்படும் வெள்ளை நிற, நீல நிற அல்லது அடர் மெரூன் நிற கார்களுக்கு பதிலாக புதிய நிறத்தில் கார்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. நல்ல பொலிவான சிவப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகளோடு புதிய கார்கள் களமிறக்கப்பட்டு இருக்கிறது. பார்க்கவே வித்தியாசமான தோற்றத்தோடு இந்த கார்கள் அமைந்துள்ளன.

கார்கள் எப்படி உள்ளது

கார்கள் எப்படி உள்ளது

இந்த கார்களில் ஆணையரக பெயர்கள் புதிய போல்ட் பார்மெட் எழுத்துக்களில் வித்தியாசமாக எழுதப்பட்டு இருக்கிறது. பொதுவாக பல்வேறு வெளிநாடுகளில் இது போன்ற தோற்றம் கொண்ட கார்கள் பயன்படுத்தப்படும். முக்கியமாக லண்டனில் இதே சிவப்பு நிற கார்கள் போலீசார் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லண்டனில் பயன்படுத்தப்படும் அந்த சிவப்பு நிற கார்கள் உலகம் முழுக்க பிரபலம். இது அவசர ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் கார்கள்.

 அவசர பணி

அவசர பணி

அதாவது அவசரமாக செல்ல வேண்டிய ரோந்து போலீஸ் கார்கள் இப்படி சிவப்பு நிறத்தில் இருக்கும். தற்போது ஆவடி, தாம்பரத்தில் இதே போன்ற சிவப்பு நிற கார்கள் களமிறக்கப்பட்டு உள்ளது. போலீசாரின் ரோந்து பணிக்காக இந்த கார்கள் களமிறக்கப்பட்டு உள்ளது. இரண்டு ஆணையரகங்களுக்கும் 10 புதிய ரக ரோந்து வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வழங்க உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+