ஆஹா.. இதுதான் ரியல் லக்கி பிரைஸ்.. வேலூரில் போராடி பாஸ் ஆன கதிர் ஆனந்த்துக்கு பதவி வருதாம்!
கதிர் ஆனந்துக்கு முக்கிய பொறுப்பு தரப்பட உள்ளதாம்
Recommended Video
சென்னை: டெல்லிக்கு போவது ஒரு பக்கம் இருக்கட்டும்.. கட்சிக்குள்ளும் ஒரு முக்கிய பதவி கதிர் ஆனந்துக்கு தரப்படலாம் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்!
ரொம்ப பெரிய வெற்றி என்றெல்லாம் வேலூர் வெற்றியை சொல்லி விட முடியாது. வேண்டுமானால், போன தேர்தலை விட 2,80,000 வாக்குகளை திமுக அதிகம் பெற்றுள்ளது. இதனால் வாக்கு வங்கியை திரும்பவும் அங்கே நிலை நிறுத்தியுள்ளது. இது ஒரு பிளஸ்தான்.
அதேபோல, வாரிசு வேட்பாளர் என்ற சர்ச்சை, உள்ளடி வேலைகளையும் தாண்டி கதிர்ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு துரைமுருகனின் மாஸ்டர் பிளானும், கதிர் ஆனந்தின் கடுமையான வெற்றியும்தான் பெருமளவு உதவியது.

எம்பி
தேர்தலில் வெற்றிக்கு பிறகும், கட்சி ரீதியாகவும் சரி, தொண்டர்களிடமும் சரி, நல்ல அணுகுமுறையில்தான் கதிர் ஆனந்த் இருக்கிறாராம். வெற்றி பெற வைத்த மக்களின் கோரிக்கைகள் மீதான நடவடிக்கையையும் உடனே எடுப்பதாக உறுதி தந்திருக்கிறார். இதனால் எம்பியாக டெல்லி சென்று நிச்சயம் வேலூரை திரும்பி பார்க்க வைப்பார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

துரைமுருகன் ஆசை
இந்த நம்பிக்கை காரணமாக கட்சிக்குள்ளும் ஒரு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. முக்கியமாக, இந்த ஆசை துரைமுருகனுக்கே இருக்கும் என்று தெரிகிறது. மகனை எம்பியாக்கினாலும், கட்சியிலும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துடணும் என்பதுதான் ஒரு தந்தையின் விருப்பமாக வெளிப்பட்டு வருகிறதாம்.

இளைஞர் அணி
அதனால் இளைஞர் அணியில் ஒரு முக்கிய பொறுப்பு, கதிர் ஆனந்துக்கு கிடைக்கும் என்கிறார்கள். அதுவும் மாநில அளவில் பொறுப்பு கிடைக்கும் என்று உறுதியாகவே சொல்கிறார்கள். வரும் 25-ம் தேதி இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்கள், மாநில அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடக்க உள்ளது.

நல்ல சேதி
இந்த கூட்டத்தை வழக்கமான பாணியில் இல்லாமல் ரொம்ப பிரம்மாண்டமாக இந்த ஆலோசனை நடத்த போகிறார் உதயநிதி. அதனால் எப்படியும் இந்த கூட்டத்திலோ அல்லது இந்த கூட்டத்துக்கு முன்பாகவோ ஒரு நல்ல செய்தி கதிர் ஆனந்துக்கு காத்திருக்கிறதாம்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications