ஆன்லைனில் இபி பில் கட்டுறீங்களா.. இப்படியும் சிக்கல் வரலாம்.. கவனம் மக்களே
சென்னை: மின் கட்டணம் முன்பு போல் இல்லை.. மிகப்பெரிய அளவில் இருக்கிறது. வெறும் 3 சதவீதம் மக்கள் கட்டும் மின் தொகையில் தான் பலருக்கு மானியம் தரப்படுவதாக கூறப்படுகிறது. 100 யூனிட் மின்சாரத்திற்கான மானியத்தை அரசு, அதிக மின்சாரத்திற்கு கட்டணம் கட்டுவோரிடம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அதிக மின்சாரப் பயன்பாட்டிற்காக மின் கட்டணத்தை பலரும் ஆன்லைனில் தான் செலுத்துகிறார்கள். அப்படி செலுத்தப்படும் மின் கட்டணம் தங்களுக்கு வரவில்லை என்று மின்சார வாரியம் கூறுகிறதாம். இரண்டு மாதம் கழித்து போனால் 10 ஆயிரம் பாக்கி உள்ளது, 15000 பாக்கி உள்ளது என்று கூறுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மார்ச் 2025 நிலவரப்படி, குடியிருப்பு, விவசாயம், வணிகம், தொழிற்சாலைகள், குடிசைகள், இதர என எல்லாம் சேர்த்து, 3.47 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர்.இதில் வீடுகளுக்கான நுகர்வோர் மட்டும் 2.36 கோடி பேர் ஆவார்.இதில் சுமார் ஒரு கோடி வீடுகளுக்கு கட்டணத்தில் பெரிய மாற்றம் இருப்பது இல்லை.. மிக குறைந்த அளவிற்கே கட்டணங்கள் உயர்ந்துள்ளது. அதேபோல் 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்துவோரும் கணிசமான பாதிப்பைத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தித்துள்ளனர். ஆனால் 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தி, அதற்காக மின்கட்டணம் செலுத்துவோர், கடுமையான உயர்வை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

மின் கட்டணம் அப்படியே டபுள் ஆகி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இது ஒருபுறம் எனில், கடைகள், வணிக நிறுவனங்களுக்கானமின் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக உயர்த்தப்படுகிறது. ஆனால் அதே அளவு அவர்களுக்கு வணிகம் உயர்ந்ததா என்றால் இல்லை.. இதனால் புதிய சுமையையும் அவர்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. என்ன தான் அரசு சிறுகுறு வணிகர்களை பாதுகாக்க சில ஸ்லாப்களை வைத்திருந்தாலும், ஓரளவு முதலீடு செய்து வணிகம் நடத்துவோர் மின் கட்டண விகிதாரத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் இருக்கிறது..
இந்த பிரச்சனை ஒருபுறம் எனில், ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்துவோர், மின் கட்டணம் சரியாகபோய்விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரங்களில் மின் கட்டணம் போயிருக்காது. நமக்கு பேமெண்ட் போயிருக்கும். ஆனால் அந்த பேமெண்ட் மின்வாரியத்திற்கு போயிருக்காது. ஆனால் பேமெண்ட் சக்சஸ் என்று நினைத்துவிட்டு பலரும் வேலையை பார்க்க தொடங்கியிருப்பார்கள்.. ஆனால் ஒரு மாதம் கழித்து மின் கட்டணம் கட்டவில்லை என்பார்கள். அனுப்பிய ரசீது போயிருக்கும்.
ஆனால் மின் கட்டணம் மின்வாரியத்திற்கு போயிருக்காது. அந்த பணம் ஒரு நான்கு நாளில் அவர்களின் வங்கி கணக்கிற்கே திரும்ப வந்திருக்கும். அதனை கவனிக்காத மக்கள் மின்கட்டணம் கட்டிவிட்டதாக நினைத்து ஏமாந்துவிடுவார்கள். இந்த சிக்கல்களை கண்டுபிடிக்க தெரியாத மக்கள் மின்வாரியத்தில் போய் முறையிட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே ஆன்லைனில் இபி பில் கட்டி பணம் போய்விட்டது என்பதை உறுதி செய்யுங்கள். அப்படி போகவில்லை என்றால் பணம் உங்களுக்கு 3 அல்லது நான்கு நாளில் வந்துவிடும்.ஒருவேளை சிக்கல் இருந்தால் வங்கியில் கடிதம் எழுதி கொடுத்து முறையிட்டு பணத்தை மீட்க முடியும். அண்மை காலங்களில் ஆன்லைனில் இபி பில் கட்டியவர்கள் இந்த சிக்கல்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கவனம் மக்களே
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications