தமிழ்நாட்டில் பத்திரப்பதிவில் புதிய நடைமுறை.. நாளை முதல் பத்திரம் பதிய போறவங்க அறிய வேண்டியவை
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு பத்திரப்பதிவில் புதிய நடைமுறை நாளை டிச.1 முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.. இதன்படி அடுக்குமாடி குடியிருப்பின் பிரிக்கப்படாத பாகம், கட்டிடம் என இரண்டையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தற்போது உள்ள நடைமுறைப்படி கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மொத்த மதிப்பில் பதிவு செய்ய வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் குடியிருப்பாக இருந்தால், பிரிக்கப்படாத பாகம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறைதான் தற்போது இருந்து வருகிறது.

இந்நிலையில் இனி பிரிக்கப்படாத பாக மனை நிலத்தை தனி ஆவணமாகப் பதிவு செய்ய முடியாது. பழைய நடைமுறை என்பது இனி, பிரிக்கப்படாத பாக மனை நிலத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே நாளை முதல் பொருந்தும்.
வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பின் படி, "தமிழ்நாட்டைத் தவிர்த்து, பிற மாநிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த ஒரு கூட்டுமதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மதிப்பானது மொத்த கட்டடப் பரப்பைப் பொருத்து கணக்கிடப்பட்டு அதனடிப்படையில் விற்பனை ஆவணம் பதிவு செய்யப்படுகிறது.
இந்த வழிமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என முடிவு செய்யப்பட்டு, இதுகுறித்து கட்டுமான நிறுவனப் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தக் கூட்டங்களில் எடுத்த முடிவின்படி, இனி கட்டடம், அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யப்படும். அதேசமயம், குறிப்பிட்ட மதிப்பு வரையிலான புதிய குடியிருப்புகள் பதிவுக்கான முத்திரைத் தீர்வையைக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
முத்திரைத் தீர்வை குறைப்பு: ரூ.50 லட்சம் வரையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரைத் தீர்வை 7 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இது 4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரைத் தீர்வை 7 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
பிரிக்கப்படாத பாக மனை: குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை, பிரிக்கப்படாத பாக மனையுடன் பதியப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். இனி அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான ஒப்பந்த ஆவணமாக இல்லாமல் விற்பனை கிரைய ஆவணமாகப் பதிந்து தங்கள் குடியிருப்பை உடைமையாக்கிக் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை டிசம்பா் 1-ஆம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே கட்டுமான ஒப்பந்த ஆவணமாகப் பதியப்பட்டிருக்கும் குடியிருப்புகளை மறு விற்பனை செய்வது இப்போது பதிவுத் துறையால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி டிச. 1-ஆம் தேதிக்குப் பிறகு பதியப்படும் கட்டுமான ஒப்பந்த ஆவணங்களைப் பொருத்து விலக்கிக் கொள்ளப்படும். கூட்டு மதிப்பின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்களுக்கு முத்திரைத் தீா்வை சலுகை வழங்கும் அரசின் நடவடிக்கையால் வங்கியில் கடன் பெற்று புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications