தமிழகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றத்தில் புதிய நடைமுறை! இந்த ஆவணங்கள் இருக்கா? மின்சார வாரியம் செம
சென்னை: மின் இணைப்பு பெயர் மாற்றத்தில் பல்வேறு கெடுபிடிபிடிகளும், தேவையற்ற தாமதங்களும், வீணான அலைக்கழிப்புகளும், முறையற்ற லஞ்சமும் நிலவுவதாக வாடிக்கையாளர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.. இதனால், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய, என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்ற விபரத்தை, மின் வாரியத்தின் அனைத்து அலுவலகத்திலும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் பொதுமக்கள் விடுத்த நிலையில், தற்போது புதிய அதிரடி ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர் மரணமடைந்துவிட்டால் அல்லது சொத்து விற்பனை காரணமாக, வீடு, கடைகளின் மின் இணைப்பு, வேறு நபரின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட நேரிடுகிறது.. ஆனால், இந்த சேவைக்கு, மின் வாரிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மின் இணைப்பு மாற்றம்
உயிரிழந்த நபரின் பெயரில் உள்ள மின் இணைப்பை மாற்ற, தாசில்தார் அலுவலகத்தில் வழங்கப்பட்ட வாரிசு சான்று, மற்ற வாரிசுகளின் தடையில்லா சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சொத்து விற்கப்பட்டால், புதிய உரிமையாளருக்கு சொத்து மாறிய கிரைய பத்திரம், பழைய உரிமையாளர் மின் இணைப்பிற்கு செலுத்திய வைப்பு தொகையை, புதிய உரிமையாளருக்கு மாற்றி தரும் ஒப்புதல் கடிதம் பதிவேற்றம் செய்து, கட்டணமும் செலுத்த வேண்டும். அந்தவகையில், தாழ்வழுத்த பிரிவில் மின் இணைப்பு பெயர் மாற்ற, 645 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆவணங்கள், விற்பனை பத்திரம்
ஆனால், பல அலுவலகங்களில், சொத்து வரி செலுத்திய ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் கேட்டு, அலைக்கழிப்பு செய்வதாக பகீர் புகார்கள் கிளம்பின.. மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்தாலும், அந்த சேவையை செய்து தருவதில்லையாம்.. விற்பனை பத்திரம், நோட்டரி கடிதம், வரி செலுத்திய ரசீது, ஆதார் நகல், சமையல் காஸ் சிலிண்டர் ரசீதுகளை கேட்கிறார்களாம்..
நோட்டரி உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் கேட்டு அலைக்கழிக்கிறார்களாம்.. உடனே சேவையை செய்து தருவதற்கும் லஞ்சம் கறாராக கேட்கப்படுகிறதாம்.. இதனால் நொந்துபோன பாதிக்கப்பட்ட மக்கள், மின் இணைப்பு செய்ய வேண்டுமானால், என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? என்ற விபரத்தை, தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை விடுத்தவாறே இருந்தனர்.
மின்வாரியம் - பெயர் மாற்றம்
இப்படிப்பட்ட சூழலில்தான், ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை, வேறு நபரின் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் நடைமுறையை, மின் வாரியம் எளிமையாக்கி உள்ளது... இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்திக் கழக வணிக பிரிவு தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில், "விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இந்தப் பணிகளை வேகப்படுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.
விற்பனை பத்திரம்
அதேநேரம், விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்ற நேர்வுகளில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று, ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்ததால் பெயர் மாற்றம் செய்யும் நேர்வுகளில், வாரிசு சான்றிதழ் அல்லது அண்மை காலத்தில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மின் இணைப்பு பெயர் மாற்றம் கோரி வரும் விண்ணப்பங்களுக்கும், இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் , மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது கவனம் பெற்றுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications