இனி புது ரேஷன் கார்டை எடுத்துக்கிட்டு.. தைரியமா போங்க! தமிழக அரசு போட்ட அசத்தல் உத்தரவு.. முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ் ஒன்று வந்துள்ளது. தமிழ்நாடு முழுக்க இதுவரை புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் பல லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இப்படி தமிழ்நாட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிதாக குடியேறியவர்கள், தனி வீடு பிரிந்தவர்கள் பலர் ரேஷன் கார்டுகளை வாங்க தொடங்கி உள்ளனர். இப்படி ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்தவர்கள் ஒருவர் இருவர் இல்லை. மொத்தமாக 2.80 லட்சம் பேர்.

இவர்கள் விண்ணப்பங்களை மேற்கொண்டு 1 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்படாமல் போனதற்கு காரணம் லோக்சபா தேர்தல். லோக்சபா தேர்தல் விதிகள் காரணமாக ரேஷன் கார்டுகளை கொடுக்க முடியவில்லை. அதன் சரிபார்ப்பு பணிகளை செய்ய முடியவில்லை.
இப்போது அதெல்லாம் முடிந்து ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகின்றன. ஆனாலும் இன்னும் பலருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கவில்லை.. புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்யவில்லை என்று புகார்கள் உள்ளன.
நல்ல செய்தி: இப்படிப்பட்ட நிலையில்தான்.. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்த 80 ஆயிரம் பேருக்கு இன்னும் ரேஷன் பொருட்களும் வழங்கப்படவில்லை.
அவர்களுக்கு வருகிற 1ம் தேதியில் இருந்து பொருட்கள் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் யாருக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்று லிஸ்ட் இருக்கும். அந்த லிஸ்டில் இதுவரை இவர்கள் பெயர் இல்லை. காரணம் இவர்கள் பெயர் கொண்ட லிஸ்ட் இன்னும் கொடுக்கப்படவில்லை. வரும் 1ம் தேதி முதல் இவர்கள் பெயர் கொண்ட லிஸ்ட் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும். அடுத்த மாதம் பெயர் வந்துவிடும். புதிய லிஸ்ட் தயாராகிறது அப்போது கொடுப்போம் என்று அரசு தரப்பு கூறி உள்ளது.
புதிய ரேஷன் கார்டு: ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
மீதம் உள்ள 2 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக ஸ்மார்டு கார்டு அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதிய ரேஷன் கார்டுகளை வழங்க இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. நவம்பர் முதல் வாரத்திற்குள் பெரும்பாலும் விடுபட்ட நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விடும் என்று தகவல்கள் வருகின்றன.
ஆனால் அவர்களும் உடனே ரேஷனில் பொருட்களை வாங்க முடியாது. அவர்களுக்கான புதிய லிஸ்ட் தயாரான பின்பே ரேஷனில் பொருட்கள் வாங்க முடியும் என்று ரேஷன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த லிஸ்ட் இந்த 1ம் தேதி தயாராகிவிடும் என்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications