சென்னை பெசன்ட் நகர் போக்குவரத்தில் மேஜர் மாற்றம்! இனி நிம்மதியா நடக்கலாம்.. டைம் நோட் பண்ணுங்க
சென்னை: நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் வசதிக்காக சென்னை அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரை 8 கிலோமீட்டர் நீள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை வரும் 4ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், பெசன்ட் நகர் அவென்யூ பகுதியில் கனரக வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மக்கள் தொகையும், வியாபார ஸ்தலங்களும் பொது இடங்களை மெல்ல மெல்ல சுருக்கி வருகிறது. இதன் காரணமாக விளையாட்டு மைதானங்கள் புதியதாக உருவாவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இது இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனை சரி செய்ய சென்னை அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரை 8 கிலோமீட்டர் நீள நடைபாதையை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதை வரும் 4ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

இந்த பாதையானது அடையாறு எல்பி சாலை மேம்பாலம் அருகே உள்ள டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து தியோசாபிகல் சொசைட்டி அமைந்துள்ள பெசன்ட் அவென்யூ வழியாக 3வது அவென்யூவில் வலதுபுறம் சென்று இடதுபுறமாக 5வது அவென்யூவில் சென்று எலியட்ஸ் கடற்கரையை அடைகிறது. எலியட்ஸ் கடற்கரையின் முடிவில் அன்னை வேளாங்கண்ணி சாலையில் வலதுபுறம் திரும்பி, மீண்டும் 3வது அவென்யூவுடன் இணைக்கும் 2வது அவென்யூவில் வலதுபுறம் திரும்பி மீண்டும் வந்த இடத்திற்கே வருகிறது.
வரும் 4ம் தேதி டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் இருந்து எலியட்ஸ் கடற்கரைக்கு நடைப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர், மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் இதேபோன்ற சுகாதார நடைபாதைகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார். இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னை பெசன்ட் நகர் அவென்யூ பகுதியில் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது . பாதசாரிகள், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையின் சார்பில் ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெறும்" என்று கூறியுள்ளார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications