தமிழ்நாட்டில் கைது செய்யும் நடைமுறையில் புதிய ரூல்ஸ்.. டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக ஒருவரை குற்ற வழக்கில் கைது செய்யும்போது அவருக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுகள் உள்ளன எதற்காக கைது செய்யப்படுகிறார் என்கிற விஷயத்தை கைதாகும் நபரிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் பெயரளவுக்கு குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு, கைது செய்வது தொடர்கிறது என்ற புகார் உள்ளது. இந்த சூழலில கைது செய்யப்படுபவருக்கு கைதுக்கான காரணம் குறித்து புரியும்படி எழுத்துப்பூர்வமாக வழங்கவேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் தமிழ்நாடு டி.ஜி.பி. சுற்றறிக்கை பிறப்பிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவையில் பல்வேறு இடங்களில் பிட்ஜி என்ற தனியார் கல்வி பயிற்சி மையங்கள் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மூடப்பட்டது. இந்த மையத்தில் பயின்ற மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணம் மற்றும் முன்வைப்புத்தொகையை திருப்பித்தரவில்லை என 533 பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

New rules for arrest procedures in Tamil Nadu High Court issues stern order to DGP

இதையடுத்து ரூ.10.63 கோடியை மோசடி செய்ததாக பிட்ஜி மையத்தின் தமிழ்நாடு நிர்வாக பங்குதாரராக செயல்பட்ட அங்குர்குமார் ஜெயின் என்பவர் மீது காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அங்குர்குமார் ஜெயினை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அங்குர்குமார் ஜெயின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் விசாரித்தார்.

அப்போது மனுதாரர் அங்குர்குமார் ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ரமேஷ், வக்கீல் ஆர்.அஸ்வின் ஆகியோர் ஆஜராகினர். அப்போது அவர்கள் வாதிடுகையில், "மனுதாரர் அங்குர்குமார் ஜெயின் ஒரு மாற்றுத்திறனாளி. அவரது செயற்கை கால் சேதமடைந்து சிறையில் நடமாட முடியாத நிலையில் இருக்கிறார். அவரை ஒருநாள் காவலில் வைத்து போலீசார் விசாரித்து விட்டனர். வங்கி மற்றும் சொத்து ஆவணங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும், என வாதிட்டனர். போலீஸ் தரப்பிலும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தரப்பிலும் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரமேஷ், "பொதுவாக ஒருவரை குற்ற வழக்கில் கைது செய்யும்போது அவருக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுகள் உள்ளன? அதற்கான முகாந்திரம் மற்றும் ஆதாரங்கள் என்ன? என்பதை புலன் விசாரணை அதிகாரி தனது சொந்த வார்த்தைகளில் ஆவணம் தயாரிக்கவேண்டும். அதில் கைதுக்கான காரணங்கள் குறித்து விரிவான விவரக்குறிப்பாக, தெளிவாக ஆவணங்களில் பதிவு செய்து கைது செய்யப்படும் நபருக்கு புரியும் மொழியில் எழுத்துப்பூர்வமாக விளக்கக்கூற வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் கைதுக்கான காரணங்களை விளக்காமல், முன்கூட்டியே அச்சடித்து வைத்திருக்கும் படிவங்களில் சம்பிரதாய நிகழ்வாக நிரப்பிக்கொள்ளும் தவறான நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. மனுதாரருக்கு வழங்கியுள்ள ஆவணங்களில் வெறுமனே 'மோசடி' எனக்குறிப்பிட்டு, மற்றத்திகள் காலியாக விடப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் இயந்திரத்தனமாக நிரப்பப்பட்டிருக்கிறது.

குறைந்தபட்சம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு குறைந்தது 2 மணி நேரத்துக்கு முன்பாவது இந்த ஆவணத்தை கைது செய்யப்படும் நபரிடம் வழங்க வேண்டும். அத்துடன் கைது விவரங்களை சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கான படிவத்தில் உள்ள பகுதிகளை காலியாக விடக்கூடாது. அதாவது 'கைதுக்கான காரணம்' என்பது வெறும் படிவமாக இருக்கக்கூடாது.

இதுகுறித்து தமிழ்நாடு டி.ஜி.பி. அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை வருகிற நவம்பர் 10-ந்தேதி டி.ஜி.பி. தாக்கல் செய்யவேண்டும். மனுதாரருக்கு கைதுக்கான காரணங்களை சட்ட ரீதியாக முறையாக தெரிவிக்காததால் அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் அளிக்கிறேன்" இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+