Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிராமங்களில் சிலிண்டர் புக்கிங் புதிய ரூல்ஸ்.. 3 நாளில் சிலிண்டர் வரும்.. அறிய வேண்டிய பெரிய மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிராமங்களில் சிலிண்டர் புக்கிங் ரூல்ஸ் தற்போது மாறி உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா நடத்தும் போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மறுபுறம் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் எண்ணெய் விநியோகத்திலும், கேஸ் சிலிண்டர் விநியோகத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை.. ஆனால் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு உள்ளது. எனினும் வீடுகளுக்கு தேவையான சிலிண்டர் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பலரும் புக்கிங் செய்வது கள்ளச்சந்தையில் பதுக்குவதை தடுக்க கிராமங்களில் சிலிண்டர் புக்கிங் கால அளவை 45 நாட்களாக அறிவித்துள்ளது. கிராம மக்கள் சிலிண்டர் முன்பதிவு செய்தால் நாளில் வந்துவிடும். இதில் உள்ள விதிகளை பார்ப்போம்.

சிலிண்டர் முன்பதிவு செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 15 நாட்கள் கால இடைவெளி இருந்தது. இது நகரங்களுக்கு 45 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே கிராமம் என்றால் 45 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் முன்பதிவு காலமான 45 நாளில் முடிந்ததும் மறுநாளே முன்பதிவு செய்யலாம்.. சிலிண்டர் முன்பதிவு செய்த 3 நாளில் வீட்டில் விநியோகம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

New Rules for Cylinder Booking in Villages Delivery Within 3 Days A Major Change You Need to Know

மத்திய அமைச்சர் விளக்கம்

கிராமப்புறங்களில் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளி 45 நாட்களாக உயர்த்தப்படுவது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி நேற்று நாடாளுமன்றத்தில் நேற்று விரிவாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " நாட்டின் எரிசக்தி தேவைகளை தக்கவைக்க போதுமான உற்பத்தி மற்றும் மாற்று விநியோக ஏற்பாடுகளை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. நீண்டகால மோதல்கள் ஏற்பட்டாலும் இந்த நிலையை தக்கவைக்க இந்தியாவில் போதுமான எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக ஏற்பாடுகள் செய்து வருகிறோம். எனவே ஒவ்வொரு வீட்டுக்கும், தொழில்துறைக்கும் எரிசக்தி முழுமையாக பாதுகாக்கப்படும்.


70 சதவீதமாக அதிகரிப்பு

உலகின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் எல்.பி.ஜி. ஆகியவற்றில் சுமார் 20 சதவீதத்தை பொதுவாகக் கொண்டு செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக்கப்பல் போக்குவரத்தை போர் நிறுத்தியிருக்கிறது.. இந்த இடையூறு இருந்தபோதிலும், மாற்று ஆதாரங்களை அதிகரிப்பதன் மூலம் நாட்டிற்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை உறுதிபடுத்த முடிந்தது. ஹார்முஸ் அல்லாத மாற்றுவழி இறக்குமதியை தோராயமாக 70 சதவீதமாக உயர்த்தி உள்ளோம். இது மோதல் தொடங்குவதற்கு முன்பு 55 சதவீதமாக இருந்து வந்தது.

தட்டுப்பாடு இல்லை

நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், அல்லது எரிபொருள் எண்ணெய் பற்றாக்குறை இல்லை. அவை கிடைப்பது முழுமையாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும். வதந்தி பரப்புவதற்கோ அல்லது போலி கதைகள் பரப்புவதற்கோ இது சரியான தருணம் கிடையாது. வரலாற்றில் மிகக்கடுமையான உலகளாவிய எரிசக்தி சீர்குலைவை இந்தியா கடந்து செல்கிறது.

எல்பிஜி விலை குறைவு

நாட்டின் எல்.பி.ஜி. உற்பத்தி 28 சதவீதம் அதிகரித்துள்ளது. சந்தை போக்குகள் மற்றும் பிராந்திய போட்டியாளர்கள் கட்டளையிடும் விலைகளை விட நுகர்வோர் விலைகள் மிகக்குறைவாகவே உள்ளன. பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் கிடைக்கிறது. எரிசக்தி தொழிலாளர்களுக்கு பின்னால், நெருக்கடியை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு பின்னால், தேசிய நலனுக்கு பின்னால் மொத்த இந்தியாவும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

25 நாட்கள் விதிமுறை

சுமார் 33 கோடி வீடுகளுக்கு எல்.பி.ஜி. கிடைப்பதை பாதுகாக்கவே அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டு விநியோகம் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மேலும் விநியோக சுழற்சி மாறாமல் உள்ளது. உள்நாட்டு எல்.பி.ஜி. சிலிண்டர்களுக்கான முன்பதிவு முதல் விநியோகம் வரையிலான நிலையான நேரம் 25 நாட்களாகவே உள்ளது.

45 நாட்களாக அதிகரிப்பு

நெருக்கடிக்கு முந்தைய விதிமுறைகளில் இருந்து மாறாமல் இருக்கிறது. ஆனால் கிராமப்புறங்களில் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளி 45 நாட்களாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எரிவாயு விநியோகத்தில் அழுத்தத்தை மேலும் குறைக்க, அரசாங்கம் மாற்று எரிபொருள் விருப்பங்களை செயல்படுத்தி உள்ளது. பொது விநியோக அமைப்பு வழிகள் மூலம் மண்ணெண்ணெய் கிடைக்கச் செய்யப்படுகிறது" இவ்வாறு கூறியுள்ளார்.

மக்களுக்கு சிரமம்

ஆனால் 45 நாட்கள் என்பது. 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதாது என்கிறார்கள். ஏனெனில் 3 வேளையும் சமைத்தால் அதிகபட்சம் 40 நாள் தான் சிலிண்டர் வரும். எப்படி 45 நாட்க காத்திருக்க முடியும். அதன்பிறகு ஒரு நாள் புக்கிங், வந்து சேர 3 நாள் என மொத்தம் 50 நாட்கள் வரை காத்திருப்பது சுமையாக மாறும் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனினும் இந்த சிரமம் தற்காலிகமானதாகவே இருக்கும். அடுத்த ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் எரிபொருள் விற்பனை சீரானது, பழைய படி 15 நாள் என விதிகள் மாற்றப்படும் என தெரிகிறது..

யாருக்கு சிக்கல்

ஏனெனில் தற்போதைய நிலையில் பலர் முன்பதிவு செய்து சிலிண்டர் கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்காமல் போய்விடக்கூடாது என்ற தற்காலிக ஏற்பாடு காரணமாக இந்த விதிகள் மாற்றப்பட்டிருக்கிறது. எனினும் சிலிண்டர் தீரும் நிலையில் உள்ளவர்கள், ஒரு சிலிண்டர் இருக்கிறதே என முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிச்சயம் சிரமத்தை தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+