பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் தவறான முடிவு.. 1500 குடும்பங்கள் பாதிப்பு! வீரபாண்டியன் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது. பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் 20 லட்சம் சதுர அடியில் 15 மாடிகள் கொண்ட தலைமைச் செயலகம் அமைய உள்ளது. கட்டட வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக மட்டும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 5 நாட்களிலேயே தலைமைச் செயலகம் தொடர்பான இடம் தேர்வு செய்யப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் இருக்கும் முதல்வர் விஜய்யின் வீட்டிற்கு வெறும் 50 மீட்டர் தூரத்தில் அமைய உள்ளது. இதனால் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

Secretariat

ஏற்கனவே கடலை பார்த்த மாதிரி நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு முதல்வர் விஜய் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இதற்காக ரூ.6 கோடி வரை செலவு செய்யப்படுகிறது. தற்போது மீண்டும் கடலுக்கு மிக அருகில் தலைமைச் செயலகம் அமைவதால், விஜய்யின் ஜாதகப்படி இந்த தலைமைச் செயலகம் கட்டப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு ஏற்கனவே அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டன. இந்த வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்திருக்கிறது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவு தவறானது.

மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், கடலோர சூழலியல், காலநிலைப் பாதிப்புகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல் மற்றும் அரசின் முக்கியமான நிர்வாக நிறுவனத்தின் பாதிப்பு ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகும். தமிழக அரசி இம்முன்மொழிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். 9 மீனவ குடியிருப்புகள் முன்மொழியப்பட்ட இடத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன.

இத்தகைய குறுகிய கடலோரப் பகுதியில் மிகப்பெரிய நிர்வாக வளாகம், அதனுடனைய சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படுவது, ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியுள்ள கடலோரப் பகுதியை மேலும் பாதிக்கும். 1,500க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெற வேண்டிய நிலைக்கும், பொருளாதார ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவர்.

உயர் பாதுகாப்பு கொண்ட அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வருகையால் தடுப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும், முக்கிய பிரமுகர்களின் வாகனப் போக்குவரத்து, காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியமர்த்தல் போன்றவை தவிர்க்க முடியாததாகும். இதன் விளைவாக மக்களுக்கு பொதுவாக சொந்தமான கடற்கரை பகுதி படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக - பாதுகாப்பு வளாகமாக மாறும் அபாயம் உள்ளது.

மேலும் காலநிலை அவசர நிலை நிலவும் இன்றைய சூழலில் இத்தகைய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது பொருத்தமற்றதும் ஆபத்தானதுமாகும். சென்னையின் கடலோரப் பகுதிகள் புயல்கள், கடல் எழுச்சி, வெள்ளம், கடலோர அரிப்புமற்றும் கடல் மட்ட உயர்வு போன்றவற்றால் அதிகரித்து வரும் ஆபத்தை எதிர்கொள்கின்றன.

எனவே அரசு பாதுகாப்பான மாற்ற இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். முன்மொழியப்படும் வளாகத்தை பசுமை வளாகம் என்று அழைப்பதால் மட்டும் அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகிவிடாது. நிலையான வளர்ச்சி என்பது பசுமை கட்டடத்தை உருவாக்குவதில் தொடங்குவதில்லை. சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுப்பதில் தொடங்குகிறது.

மாநிலத்திற்கு நவீன நிர்வாக கட்டமைப்பு தேவைப்படலாம். ஆனால் நிர்வாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் உணர்திறன் மிக்க கடலோரப் பகுதியை ஆக்கிரமிப்பதும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதும், பொதுமக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதும் ஜனநாயகப் பொது வெளியை சுருக்குவதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதனால் தமிழக அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலக திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாக பொருத்தமான மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+