Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயன்படாத லேப்டாப், செல்போன்களில் தங்கம்! பிரித்து எடுப்பது எப்படி? எளிய முறையை கண்டறிந்த விஞ்ஞானிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இ வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில் பழைய லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் புதிய வழிமுறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இ கழிவு மேலாண்மையில் இந்த தொழில் நுட்பம் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.

உலக அளவில் இ வேஸ்ட் என்பது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. 40 டன்கள் எடை கொண்ட 1.55 மில்லியன் டிரக்குகளில் ஏற்றும் அளவுக்கு இ வேஸ்ட் அளவு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மக்களிடையே எலக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு கூடிக்கொண்டே இருப்பதால் இ வேஸ்ட் என்பதுதான் வரும் காலத்தில் பெரும் தலைவலியாக மாறும் என்பது நிபுணர்கள் வாதமாக உள்ளது.

new-simple-technique-discovered-to-recover-gold-from-phones-and-laptops

இ வேஸ்ட்களில் இருந்து தங்கம்

எனவே, தற்போது இ வேஸ்ட்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் எளிய முறையானது, மறுசுழற்சி முறையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். செல்போன் போன்ற எல்க்ட்ரானிக் உபகரணங்கள் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த இ வேஸ்ட் கழிவுகள் என்பது தற்போது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

ஐநாவின் குளோபல் இ வேஸ்ட் மானிட்டர் கண்காணிப்புபடி 2022 அறிக்கையின்படி, அந்த ஆண்டு மட்டும் 62 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி கைவிடப்பட்ட மின் கழிவுகள் என்பது சுற்றுசூழலுக்கு தீங்காக இருப்பது மட்டும் இன்றி ஆயிரக்கணக்கன கோடி மதிப்புள்ள அரிய தனிமங்களும் வீணடிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி வெறும் 1 சதவீதம் மின் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு கொண்டு செல்லப்படுவதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இன்றி

இந்நிலையில், விஞ்ஞானிகள் பழைய மொபைல், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து தங்கத்தை பாதுகாப்பாகவும் சுற்றுச்சூழல் பாதிப்பின்றியும் பிரிக்கக்கூடிய புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே இதை எடுப்பதற்கான வழிமுறைகள் இருந்தாலும் எளிய முறையில் எடுக்க கூடிய வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

'நேச்சர் சஸ்டைனபிலிட்டி' இதழில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. புதிய முறையானது தற்போது நடைமுறையில் இருக்கும் முறைகளுக்கு மாற்றாகவும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும் அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

எப்படி தங்கம் எடுக்கப்படுகிறது?

முதலில் தங்கம் ட்ரைகுளோரோ ஐசோசயனூரிக் அமிலம் மூலம் மின்னணு சாதனங்களில் இருந்து கரைத்தெடுக்கப்படுகிறது. பின்னர், பாலிசல்பைடு பாலிமர் தங்கத்தை உறிஞ்சும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் கரைதல், பிணைத்தல் மற்றும் மீட்டெடுத்தல் ஆகியவை இந்த முறையின் முக்கிய படிகளாகும். பின்னர் அதை கைப்பற்றிய பாலிமரை பைரோலைசிங் அல்லது பாலிமரைசிங் நீக்கம் செய்வதன் மூலம் உயர் தூய்மை முறையில் தங்கம் மீட்கப்படுகிறது.

இந்த முறையானது இயற்கை சுரங்கங்களில் இருந்தும் பழைய மின் சாதனங்களிலும் வெற்றிகரமாக செயல்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பாரம்பரிய முறைப்படி தங்கத்தை எடுக்க பயன்படுத்தப்படும் ஆபத்தான சயனைடு, மர்மரிக் அமிலம் போன்ற ரசாயனங்களை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான மாற்றாக அமைகிறது. இந்த நுட்பம் தங்கம் பிரித்தெடுப்பதற்கான ஒரு நிலையான தீர்வை முன்வைப்பதாக அமைந்துள்ளது. முதன்மை மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட மூலங்களிலிருந்து பசுமையான உற்பத்தியை ஆதரிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+