"மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி".. அதிமுக உருவாக்கிய புதிய ஸ்லோகம்..!
அதிமுக தரப்பினர் இன்று பிரதமரை வாயார புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
சென்னை: இன்று மோடி பங்கேற்ற விழாவில் அதிமுக தலைவர்கள் புது ஸ்லோகம் ஒன்றினையே உருவாக்கி விட்டார்கள். அதுதான் இன்றைய ஸ்பெஷல்!
ஜெயலலிதா இருந்தபோதும் சரி, மறைந்தபோதும் சரி, வழக்கமாக தமிழக அமைச்சர்கள் சொல்லும் ஸ்லோகம் "மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சி தலைமை அம்மா அவர்கள்" என்பதுதான்.

இதை கிட்டத்தட்ட எல்லா அமைச்சர்களுமே இதை உச்சரித்தாலும், முதல்வரும், எடப்பாடியும் இதை சொல்வதே தனி அழகுதான். இருவருமே வேகவேமாக இதனை உச்சரிப்பார்கள். அது காரசார விவாதமாக இருந்தாலும் சரி, பேட்டிகள் தரும்போதும் சரி, சரளமாகவும், அதே நேரத்தில் ஸ்பீடாகவும் மறக்காமலும் வந்து இந்த வார்த்தைகள்தான் விழும்.
ஆனால் இந்த பழக்கதோஷமா என்னவென்று தெரியவில்லை, இன்று மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் உட்பட எல்லோருமே புது ஸ்லோகம் ஒன்றினை சொன்னார்கள். அது "மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி" என்பதுதான். இந்த முழக்கம் விழா தொடங்கி முடியும் வரை கேட்டது.
அதேபோல விழா மேடை மற்றும் சுற்றியுள்ள இடங்கள், அலங்காரங்கள் என எல்லாமே பச்சை கலரில் மின்னியது. வழக்கமாக பாஜக தலைவர்கள் பங்கேற்ற மேடை காவி நிறத்தில் இல்லாமல், பச்சை பசேல் என இருந்தது அதிமுக விழா போலவே இருந்தது.
விழாவின் இன்னொரு சிறப்பம்சம், மோடி பேச்சை மொழிபெயர்த்து கொண்டிருந்த எச்.ராஜா, சம்பந்தமே இல்லாமல் "ரயில்கள் திறமையாக ஓடும்" என்றார். ரயில்கள் ஓடும் சரி... திறமையாக எப்படி தானாகவே ஓடும் என்றுதான் புரியவில்லை. மற்றபடி விழா நன்றாகவே நடந்து இனிதே முடிந்தது!
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications