ஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை.. அதிமுக தலைமையகத்தில் திறக்கப்பட்டது!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சில மாதங்கள் முன் சிலை திறக்கப்பட்டது. ஆனால் இந்த சிலை மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்த சிலை பார்க்க ஜெயலலிதாவை போல இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவை போல சிலை கம்பீரமாக இல்லை என்று கூறினார்கள். இந்த நிலையில் விமர்சனங்களை அடுத்து இந்த சிலை அகற்றப்பட்டது. அதன் புதிய சிலை உருவாக்கும் பணிகள் நடந்தது.
கடந்த சில நாட்கள் முன் புதிய சிலை உருவாக்கப்பட்டு அதன் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நடந்த விழாவில் இந்த புதிய சிலை திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சிலையை திறந்து வைத்தனர். அதிமுக நிர்வாகிகள் பலர் இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
ஆந்திராவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த மாதம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சிலையும் ஜெயலலிதா போல கம்பீரமாக இல்லை என்று சில விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதிமுக தலைமையகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
[அதிமுக விழாவா?.. அம்மன் விழாவா?... அங்காள பரமேஸ்வரியே பாடலை கேட்டு சாமி ஆடிய பெண்கள்..]
சிலையை திறந்து வைத்த பின்னர் ஜெயலலிதாவின் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
{document1}












Click it and Unblock the Notifications