அதிமுக விழாவா?.. அம்மன் விழாவா?... அங்காள பரமேஸ்வரியே பாடலை கேட்டு சாமி ஆடிய பெண்கள்..
Recommended Video

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் அதிமுகவின் 47-ஆவது தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் அம்மன் பாடலுக்கு பெண்கள் சாமிஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜமுனாமரத்தூர் பகுதியில் எம்எல்ஏ பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவின் 47-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன், அதிமுக பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேசுகையில் திருவண்ணாமலை ஆன்மீக பூமி. நானும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ளதால் செல்வராஜ் பக்தி பாடலை பாடி பேச்சை தொடங்குங்கள் என்றார்.
இதை ஏற்ற விழுப்புரம் செல்வராஜ், அங்காள பரமேஸ்வரியே என அம்மன் பக்தி பாடலை பாடினார். அப்போது கூட்டத்திலிருந்த பெண்கள் அவர் பாடிய பாடலை கேட்டு பக்தி பரவசம் அடைந்தனர்.
இன்னும் சில பெண்களோ அங்கு எழுந்து நின்று சாமியாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விழாவுக்கு வந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பன்னீர் செல்வம் வழங்கினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications