Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை என்ன விலைனு கேளு.. திண்டுக்கல்லுக்கு திடுக்குனு அதிர்ஷ்டம்! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்! என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டமான திண்டுக்கல்லில் புதிய டைடல் நியோ தொழில்நுட்ப பூங்கா உதயமாகிறது என தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு முழுவதும் முன்னணியில் உள்ள நகரங்களில் சென்னை முக்கிய பங்கு வகிக்கிறது. பெங்களூருக்குப் பிறகு பெரிய ஐடி மையமாக சென்னை விளங்குகிறது. ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில், இது போன்ற ஐடி நிறுவனங்களில்லை.

இதனால், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட இளைஞர்கள் ஐடி வேலை செய்ய வேண்டுமெனில், அவசியம் சென்னை அல்லது கோவை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த பிரச்சினையை மாற்றுவதற்காகவே அரசு மாநிலம் முழுவதும் டைடல் பார்க், மினி டைடல் பார்க், டைடல் நியோ பார்க் போன்றவற்றை அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

Tamil Nadu Govt TIDEL Park

தமிழக ஐடி பூங்கா

ஏற்கனவே விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் இப்போது புதிய மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட உள்ளன. ஒவ்வொரு பூங்காவும், தரைத்தளம் உட்பட மொத்தம் நான்கு தளங்களாக கட்டப்படும். ஒவ்வொரு கட்டிடத்திற்கும் சுமார் 37 கோடி ரூபாய் மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் மாவட்ட இளைஞர்கள்

அந்த வகையில், தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டமான திண்டுக்கல்லில் புதிய டைடல் நியோ தொழில்நுட்ப பூங்கா உதயமாகிறது என தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் #திராவிட_மாடல் ஆட்சியில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சென்னைக்கு மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் 17 புதிய TIDEL Neo திட்டங்களும், 3 புதிய TIDEL Park திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் டைடல் நியோ பார்க்

இதில் 7 TIDELNeo மையங்கள் திறக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகின்றன. மேலும் 6 மையங்கள் கட்டுமானத்தில் உள்ளன; இன்னும் 4 மையங்களில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அதோடு, மதுரை, திருச்சி மற்றும் ஓசூர் நகரங்களின் 3 புதிய #TIDELPark-களை அமைக்கும் பணியை திராவிட மாடல் ஆட்சி துவங்கியுள்ளது. மாவட்ட இளைஞர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே உலகத் தரம் வாய்ந்த வேலைவாய்ப்பைப் பெறும் தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது இலக்கு.

மினி டைடல் பார்க்

இந்த வரிசையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல்-தேனி புறவழிச்சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டையில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய "மினி டைடல் பார்க்" ஒன்று அமைக்கப்படும்" என கூறியுள்ளார். விவசாயத்தை பிரதானமாக கொண்டிருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான இளைஞர்கள் பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி செய்து வரும் நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+