என்னை பேசி பேசி செட் பண்ணிட்டாங்க சார்.. கைதாகும் போது போலீசிடம் கெஞ்சிய சந்திரமோகன்.. புது வீடியோ
சென்னை: சென்னை லூப் சாலையில் போலீசாரை மிரட்டிய வேளச்சேரி சந்திரமோகனை போலீசார் கைது செய்ய சென்ற போது அவர்களிடம் கெஞ்சிய புதிய வீடியோ வெளியாகியுள்ளது. என்ன பேசினேன் என்று தெரியவில்லை எனவும் போதையில் அவ்வாறு பேசிவிட்டதாகவும் சந்திரமோகன் வீடியோவில் கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சென்னை மெரினா பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரை நிறுத்திவிட்டு ஆண் - பெண் ஜோடி ஒன்று காருக்கு வெளியே நின்றுகொண்டிருந்தது. மது போதையில் இருந்த அந்த ஜோடியை போலீசார் அங்கிருந்து கிளம்ப சொன்னதாக கூறப்படுகிறது.

அப்போது ஆண் - பெண் ஜோடியினர் அங்கிருந்து செல்ல முடியாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரை ஆபாசமாக பேசியதோடு, பணி செய்ய விடாமல் இடையூறு செய்தனர். இந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த போலீசாரை, செல்பி எடுப்பது போல் போஸ் கொடுத்து நக்கல் செய்தனர். அதோடு, ஒருமையிலும் போலீசாரை பேசியதோடு, என்னை எதுவும் செய்ய முடியாது எனவும், உதயநிதிட்ட பேசவா? என போலீசாருக்கு மிரட்டல் விடுத்து பேசினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்ட ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் யார் என்று விசாரணை தொடங்கினர்.. இதில் போக்குவரத்து போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டது வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன் என்பதும், அந்த பெண் மயிலாப்பூரை சேர்ந்த தனலட்சுமி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் சந்திரமோகனை அதிரடியாக கைது செய்தனர். 4 பிரிவுகளின் கீழ் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சந்திர மோகன், தாங்கள் செய்தது தவறுதான் எனக் கூறி மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்று வெளியானது. இதற்கிடையே, துரைப்பாக்கம் லாட்ஜில் தங்கியிருந்த போது சந்திரமோகனையும் தனலட்சுமியையும் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
போலீசாரை பார்த்ததும் சந்திரமோகன் கெஞ்சும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மதுபோதையில் கோபத்தில் அவ்வாறு பேசிவிட்டதாகவும், வீடியோ எடுத்தவர் பேசிபேசி செட் பண்ணிவிட்டதாகவும் அதனால் கோபத்தில் என்ன வேணா பண்ணிக்க என்று பேசிவிட்டதாகவும் போலீசாரிடம் கெஞ்சினார்.
நாங்கள் பேசியது மட்டும் தான் பதிவாகியிருக்கிறது என்றும் போலீசார் பேசியது இல்லை எனவும் போலீசாரிடம் பவ்வியமாக சந்திரமோகன் விளக்கி கொண்டு இருக்கிறார். என்ன பேசினேன் என்றே எனக்கு நியாபகம் இல்லை. காலையில் வீடியோ பார்த்த பிறகுதான் தெரிந்தது என்றும் சந்திரமோகன் கெஞ்சினார். போலீசார் அவரை கண்டிக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications