பெங்களூர், ஹைதராபாத் எல்லாம் இருக்கட்டும்.. நியூயார்க் ஸ்டைலில் சென்னையில் சம்பவம்! பிரம்மாண்டம்
சென்னை: சென்னை ஐடி காரிடர் பகுதியில் அசத்தலான சம்பவம் ஒன்று நடக்க போகிறது.. இங்கே தமிழக அரசு சார்பாக பிரம்மாண்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. நியூயார்க்கில் இருப்பது போல அசத்தல் மாற்றம் இங்கே வர உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சிறுசேரி சிப்காட் அருகே ஓஎம்ஆரில் 50 ஏக்கரில் புதிய பிரமாண்டமான நகர்ப்புற வனப் பூங்காவை உருவாக்க உள்ளது.
சென்னையில் ஏற்கனவே பல இடங்களில் மியாவாகி காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஜப்பானை சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் தாவர வளர்ப்பு எக்ஸ்பர்ட் அகிரா மியாவாகி. அகிரா மியாவாகி உருவாக்கிய செடி வளர்ப்பு முறைதான் மியாவாகி தொழில்நுட்பம். உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு சென்று இவர் தனது மியாவாகி தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்து வருகிறார்.

92 வயதாகும் இவர் 1993ல் இருந்தே உலகம் முழுக்க பல்வேறு பெருநகரங்களுக்கு சென்று எப்படி காடுகளை வேகமாக உருவாக்குவது, மரங்களை வேகமாக வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்து வருகிறார். உலகில் இருக்கும் பல பெரு நகரங்கள் இவரின் முறையை பின்பற்றி வருகிறது.
மரம் நடுதல்: மியாவாகி தொழிநுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேகமாக மரங்களை வளர்க்கும் தொழில்நுட்பம் ஆகும். மரங்கள் சாதாரணமாக வளரும் வேகத்தை விட இந்த மியாவாகி தொழில்நுட்பம் மூலம் 10 மடங்கு வேகமாக வளரும். அதேபோல் 30 மடங்கு அடர்த்தியாக இதன் மூலம் மரங்கள் வளரும். ஒரே இடத்தில் அருகருகே நிறைய உள்ளூர் மரங்களை நடுவது இந்த தொழில்நுட்பம் ஆகும்.
இதில் முக்கியமான விஷயம், வெறும் 20 வருடங்களில் இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காடுகளை உருவாக்கலாம். அதிலும் 3 வருடங்களுக்கு பின் இதை கவனிக்க வேண்டியதே இல்லை. அதுவாக தானாக வளர்ந்து கொள்ளும். ஆம், செடிகளை நட்டு 3 வருடம் கவனித்தால் போதும், அதன்பின் அந்த மரங்கள் தானாக வளர்ந்து காடாக மாறிவிடும். இதனால்தான் உலக நாடுகள் மியாவாகி தொழில்நுட்பம் மீது கவனம் செலுத்துகிறது.
இந்தியாவில் இருக்கும் பெங்களூர் போன்ற பெருநகரங்கள் இந்த மியாவாகி தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்த தொடங்கிவிட்டது. இந்த நிலையில் சென்னையில் மியாவாகி தொழில்நுட்பம் மூலம் குட்டி காடு ஒன்றை உருவாக்க உள்ளனர். சென்னையில் உருவாக்கப்பட உள்ள மூன்றாவது காடு ஆகும் இது. சென்னையில் ஏற்கனவே கோட்டூர்புரம் மற்றும் அடையார் பகுதிகளில் இரண்டு காடுகள் இப்படி உருவாக்கப்பட்டு ,வளர்க்கப்பட்டு வருகிறது.
காடு உருவாக்கம்: இந்த நிலையில்தான் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சிறுசேரி சிப்காட் அருகே ஓஎம்ஆரில் 50 ஏக்கரில் புதிய பிரமாண்டமான நகர்ப்புற வனப் பூங்காவை உருவாக்க உள்ளது. இங்கே நிலம் ஒன்று வாங்கப்பட்டு அதில் 50 ஏக்கரில் மிகப்பெரிய காட்டை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை வானிலை, ஐடி பகுதியில் மரங்களின் தேவை ஆகியவற்றை மனதில் வைத்து இந்த காடு அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே அடையாரில் 2000 செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 40 வகையான செடிகள் அடையாரில் நடப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் சதுர அடிக்கு இந்த அடையார் காடு உருவாக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் வளசரவாக்கத்தில் மொத்தம் 700 செடிகள் நடப்பட்டு உள்ளது. இங்கு 45 வகையான செடிகள் நடப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் சதுர அடிக்கு இங்கு செடிகள் நடப்பட்டுள்ளது.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications