சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக ஐடி விங்கின் அடுத்த அசைன்மெண்ட்! டார்கெட் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்! ஜரூராக நடக்கும் வேலை!

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக முக்கிய அசைன்மெண்ட் ஒன்றை கையில் எடுத்திருக்கிறது அதிமுக ஐடி விங்.

திமுகவையும், கருணாநிதியையும் கடுமையாக சாடி கடந்த காலங்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொடுத்த பேட்டிகள் மற்றும் மேடை பேச்சுக்களின் கிளிப்களை தயாரித்து அதனை ஈரோடு கிழக்குத் தொகுதி முழுவதும் பரப்புவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.

குறிப்பாக 2ஜி பிரச்சனை எழுந்த நேரத்தில் திமுகவை மிகக் கடுமையாக சாடி ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டிகள் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

களம் இறங்கிய காங்கிரஸ்..ஆதரவா? எதிர்த்து போட்டியா? மநீம நிர்வாகிகளுடன் இன்று கமல் இறுதி ஆலோசனை களம் இறங்கிய காங்கிரஸ்..ஆதரவா? எதிர்த்து போட்டியா? மநீம நிர்வாகிகளுடன் இன்று கமல் இறுதி ஆலோசனை

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக அதிமுக தரப்பில் களப்பிரச்சாரம் ஒரு பக்கம் நடைபெற்றாலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி. அந்த வகையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் திமுகவுக்கு எதிரான சில பழைய பேச்சுக்களின் கிளிப்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

2ஜி அலைக்கற்றை

2ஜி அலைக்கற்றை

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிணக்கு ஏற்பட்டு சில காலம் கூட்டணி இல்லாமல் இருந்த போது வகை தொகை இல்லாமல் கருணாநிதியை வசைபாடியிருந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். குறிப்பாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் திமுக அமைச்சர் செய்த தவறால் காங்கிரஸும் சேர்ந்து பழியை சுமப்பதாக அவர் கொடுத்த பேட்டிகளின் கிளிப்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

திமுக வேகம்

திமுக வேகம்

இதனிடையே அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக ஐடி விங் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 அமைச்சர்கள் 19 மாவட்டச் செயலாளர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ள திமுக தலைமை கைச் சின்னத்துக்கு ஓட்டுக்கேட்டு பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறது.

சீட் வேண்டாம்

சீட் வேண்டாம்

தனக்கு எதிராக தனது பழைய பேச்சுக்களை வெட்டி ஒட்டி எதிர்தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்பதாலும், வயதாகிவிட்டதாலும் தனக்கு சீட் வேண்டாம் தனது இளைய மகனுக்கு சீட் கொடுங்க என கேட்டிருந்தார் ஈவிகே எஸ் இளங்கோவன். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் தலைமையோ வாரிசுக்கு கறாராக நோ சொல்லிவிட்டு இளங்கோவனை களமிறக்கியுள்ளது.

English summary
AIADMK IT wing has taken up a major assignment against Congress candidate EVKS Elangovan who is contesting Erode East by-election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X