புது வருஷமும் அதுவுமா சூப்பர் சேதி சொன்ன புவியரசன்.. இந்த தேதியில் செம மழை இருக்காம்.. இடிமின்னலுடன்
5ம் தேதி தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: புத்தாண்டு தினத்தில் தமிழகத்தின் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று ஆய்வு மையம் சில தகவல்களை தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஜனவரி 5-ம் தேதி கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Recommended Video

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வரும் சூழலில், ஈரப்பதம் மிகுந்த காற்று வடகிழக்கு திசையில் இருந்து வீசி வருகிறது.. இதன் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்தும்வருகிறது. அடுத்த சில தினங்களுக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் இன்று இதை பற்றி தெரிவித்துள்ளார்.. அடுத்த 5 நாட்களுக்கு வானிலையின் போக்கு எப்படி இருக்கும் என்றும் கூறியுள்ளார். காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
நாளை 2-ம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். நாளை மறுநாள் 3-ம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்று கூறியுள்ளார்.
அதேபோல 4ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் 5ம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்றம் புவியரசன் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதாவது தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஜனவரி 4-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலையே நீடிக்கும், 5-ம் தேதி நல்ல மழை பெய்யும் என்கிறார். அதேபோல, தமிழகத்தில் இந்தாண்டு சராசரியை விட 4 சதவிகிதம் அதிகமான மழை பெய்துள்ளதாகவும், ஜனவரி 10ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications