ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடப் போறீங்களா.. காவல்துறை விதிகளை கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள் கட்டுப்பாடுகளை மீறினால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ள போலீசார், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக 20,500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். 2026ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனைவரும் தயாராகி வரும் நிலையில், எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் கடற்கரை, வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மாலை முதல் நாளை வரை பொதுமக்கள் கடலில் குளிக்கவோ, இறங்கி விளையாடவோ அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டையொட்டி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மது அருந்தும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்ககூடாது, கேளிக்கை விடுதிகளில் இரவு 1 மணி வரை மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும், அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது, நீச்சல் குளங்கள் அருகே போதிய பாதுகாவலர்கள் நியமனம் உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்பதிவு செய்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் போதை நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்குகளில் சிக்குபவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
அதேபோல் வாண வேடிக்கைகள், பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. வாகனங்களை சாலைகளில் நிறுத்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, தீ தடுப்பான உபகரணங்கள், மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் ஆகியவை தயாராக இருக்க வேண்டும் என்றும், விதிகளை மீறும் நட்சத்திர விடுதிகளில் நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications