ஹிஜ்புத் தகர், அல் உம்மா உடன் தொடர்பு.. தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் ரெய்டு!
சென்னை: தமிழ்நாட்டில் என்ஐஏ திடீர் ரெய்டு மேற்கொண்டு வருகிறது. 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஜ்புத் தகர், அல் உம்மா இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம்தான் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் சோதனை நடத்தியது.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழித்தடத்தில் ஆறு லஷ்கர் ஆட்கள் ஊடுருவல் குறித்த உளவுத்துறை உள்ளீட்டைத் தொடர்ந்து கடந்த வாரம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட உயர் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்ஐஏவின் 5 குழுக்கள் சோதனையில் ஈடுபட்டன. இதுவரை பல லேப்டாப்கள் மற்றும் பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற முக்கிய ஸ்தாபனங்களில் ஊடுருவல்காரர்களால் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து உளவுத்துறை எச்சரித்துள்ளது.
அதிகாலை அதிரடி ரெய்டு: இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று அதிகாலை தமிழ்நாட்டில் என்ஐஏ திடீர் ரெய்டு மேற்கொண்டு வருகிறது. மொத்தமாக 85 அதிகாரிகள் ரெய்டுகளில் ஈடுபட்டு உள்ளனர். 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஜ்புத் தகர், அல் உம்மா இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹிஜ்புத் தகர், அல் உம்மா இயக்கங்களின் உறுப்பினர்கள் இங்கே உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அமைப்புகளின் கிளை உறுப்பினர்கள் இங்கே திட்டங்களை வகுக்கலாம் என்பதால் தற்போது ரெய்டு நடந்து வருகிறது.
முக்கியமாக புதுக்கோட்டையக்கில் அல் உம்மா இயக்கத்துடன் தொடர்புடையவராக கருதப்படும் அப்துல்கான் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதே நேரத்தில் பீகார், கர்நாடகா, ஜார்கண்டிலும் வேறு வேறு விஷ்யங்களுக்காக ரெய்டுகளை என்ஐஏ அமைப்பு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications