இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கும் தொடரும்.. தமிழக அரசு
சென்னை: இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கடந்த திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. அது போல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, மதியம், இரவு குறிப்பிட்ட நேரங்களில் ஜொமாட்டோ, ஸ்விக்கி ஆகிய உணவு டெலிவரி சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அத்தியாவசியத் தேவைகளுக்காக செல்வோர் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமார் 7 மாதங்களுக்கு பிறகு நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போடப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் வரும் திங்கள்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பெரிய கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை இயங்க தமிழக அரசு தடை விதித்து புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications