தூக்கத்தில் இருந்தபோதே பாம்பன் மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்த இலங்கை ராணுவம்! காஸ்ட்லி படகும் போச்சு
சென்னை: வாழ்வாதாரத்திற்காக கடலை நம்பியிருக்கும் மீனவர்கள், எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், தற்போது மீண்டும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் அத்துமீறிக் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது..

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரம், இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றத்தையும் மீனவ குடும்பங்களிடையே பெரும் துயரத்தையும் ஏற்படுத்தி வருகிறது..
முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
மீனவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகுகளை அரசுடைமையாக்குவது மற்றும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களால் மீனவ கிராமங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்குத் தொடர்ந்து கடிதங்கள் வாயிலாக தங்களின் கண்டனங்களையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகிறார்.. இருந்தாலும், கடலில் மீனவர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறைந்தபாடில்லை..
இப்படிப்பட்ட சூழலில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 12 மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்..
12 மீனவர்கள் கைது
அவர்கள் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே அமைந்துள்ள தெற்கு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி 12 மீனவர்களையும் அதிரடியாக கைது செய்தனர்..
மேலும், டேவிட் என்பவருக்கு சொந்தமான அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், விசாரணைக்காக மீனவர்களைத் தலைமன்னார் கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றனர்..
இந்தக் கைது நடவடிக்கை ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதி மீனவ மக்களிடையே கடும் கோபத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது..
வாழ்வாதாரம் பாதிப்பு
ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சக மீனவர்களை விடுவிக்கக் கோரி, கடந்த பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.. அந்தப் போராட்டம் முடிந்த கையோடு, மீண்டும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது..
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.. சிறையில் உள்ள மீனவர்களையும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் எவ்வித சேதமுமின்றி மீட்க வேண்டிய கட்டாயமும், தேவையும் உள்ளது...!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications