கோவையில் நிகிதா? அதுவிடுங்க, முதலிரவிலேயே எஸ்கேப் ஆகி அட்டூழியம்.. விஏஓ வேலைக்கு 7 லட்சம்.. பரபரப்பு
சென்னை: நிகிதா எங்கே என்று தெரியவில்லை.. ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.. நிகிதாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை தந்தும், செய்தியாளர்களிடம் தங்கள் ஆதங்கத்தை கொட்டியும் வருகிறார்கள்.. நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, வீட்டில்தான் இருக்கிறேன் என்று நிகிதா சொன்ன தகவல் ஒன்று இணையத்திலும் வெளியாகியிருக்கும் நிலையில், நிகிதா விவகாரம் சூடுபிடித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின்போது கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த, மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பணமோசடி புகார்களின் கீழ் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசு வேலை - மோசடி
நிகிதா மட்டுமல்ல, நிகிதாவின் அம்மா உட்பட அவரது மொத்த குடும்பமும் மோசடி செய்தவர்களாம்.. 15 வருடங்களுக்கு முன்பேயே பலரிடமும், அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி, பல லட்ச ரூபாயை சுருட்டியவர்களாம்..
இப்படிப்பட்ட சூழலில்தான், நிகிதாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் சொல்லி வருகிறார்கள்.
அந்தவகையில், நிகிதாவின் முன்னாள் கணவர் திருமாறனும் பகீர் குற்றச்சாட்டை நிகிதா மீது கூறியிருக்கிறார்.. இவர் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் ஆவார்..
முதலிரவில் பாலும் பழமும்
மடப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "2004ல் நிகிதாவை கல்யாணம் செய்து கொண்டேன்.. அன்று பாலும் பழமும் சாப்பிட்ட முதலிரவு அன்றே ஓடிவிட்டார். இவங்க குடும்பமே சீட்டிங் குடும்பம். அப்பா சப் - கலெக்டர்.. அம்மா டீச்சராக இருந்தவர்.. கோவையில் போலீஸ் எஸ்பி ஒருவர் இவங்க குடும்பத்துக்கு பழக்கம் என்பதால், பல்வேறு மோசடி வேலைகளை செய்து வந்தாங்க.
நிகிதா மீது 4 கல்யாண மோசடி வழக்கு இருக்கு. மதுரையில் எனக்கும் அவங்களுக்கும் கல்யாணம் நடந்துச்சு. ஒரு நாள் கூட என்னுடன் வாழல. வரதட்சணை கேட்டதா கேஸ் போட்டு எங்க குடும்பத்தையே கோர்ட்ல நிறுத்தினாங்க.. என்கிட்ட, 10 லட்சம் வாங்கிட்டு தான் வழக்கை வாபஸ் வாங்கினாங்க. நிகிதா நிறைய பொய் பேசுவாங்க... அந்த பொய்யையும் நம்புறமாதிரி பேசுவாங்க..நகை காணாமல் போனது உண்மையா? என்பதை போலீஸ்தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.
கல்லூரி மாணவிகள்
இதேபோல, நிகிதா மீது கல்லூரி மாணவிகளும் புகார் தந்துள்ளனர்.. திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தாவரவியல் துறை மாணவிகள், கடந்த 2024ல் நிகிதா குறித்து மாவட்ட கலெக்டரிடமே புகார் தந்திருக்கிறார்களாம்.. தாவரவியல் துறையின் துணைத் தநிகிதா பணியாற்றி வரும்நிலையில், நிகிதா இப்போது தொடர் விடுமுறையில் இருக்கிறாராம்.. எனவே காலேஜூக்கும் போவதில்லை.
இதேபோல, தானும் பாதிக்கப்பட்டதாக, திருமங்கலத்தை சேர்ந்த நிகிதாவின் உறவினர் தெய்வம் பகீரை கிளப்பியிருக்கிறார்..
விஏஓ வேலைக்கு பணம்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெய்வம் சொல்லும்போது, "கடந்த 2010-ல் அரசு வேலையை 2 நாளிலேயே வாங்கி தருவதாக சொல்லி ரூ.9 லட்சம், என் சொந்தக்காரர் வினோத்திற்கு விஏஓ வேலைக்கு ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சம் தந்து ஏமாந்து விட்டோம். பணம் கேட்டால் நிகிதா மிரட்டினார்.. இப்படி கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டவர்" என்று தெரிவித்துள்ளார்.
நிகிதா மீதான புகார்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நிகிதாவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. நிகிதா ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்தானவர், ஆனால் குழந்தை இல்லையாம்..
இப்போது நிகிதாவை காணவில்லை.. வெளியூரில் இருப்பதாக தெரிகிறது.. நான் வீட்டில்தான் இருக்கிறேன், விசாரணைக்கு அழைக்கும்போது கண்டிப்பாக செல்வேன் என்று, நிகிதா தந்த பேட்டியொன்று இணையத்திலும் வெளியாகியிருக்கிறது. ஆனால், இதுவரை நிகிதா எங்கே என்று தெரியவில்லை..
இந்தநிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்றவாறு, ஓட்டல் ஒன்றில் நிகிதா தன்னுடைய அம்மாவுடன் வந்ததாகவும் சொல்கிறார்கள்.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. இது தொடர்பான விசாரணையிலும் போலீசார் இறங்கியிருக்கிறார்கள்.
இதனிடையே நிகிதா கோவையில் இருப்பதாக ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதில், ‛2 மணி நேரம் நிகிதாவை லாக் பண்ணி வச்சி இருந்தோம் சார். ஆனா கன்ட்ரோல் ரூமுல இருந்தவங்க அவரை விட சொல்லிட்டாங்க. இப்ப அவங்க கார் கோவை நோக்கி போய்கிட்டு இருக்குது சார்' என்று நிகிதாவை காருடன் சிறைபிடித்து வைத்திருந்தவர்கள், போலீசாரிடம் பேசும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications