நீலகிரி, கோவையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. குளு குளு அறிவிப்பு வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்
மேற்குத்திசை காற்றின் வேகமாறுபாட்டால் இன்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: மேற்குத்திசை காற்றின் வேகமாறுபாட்டால் இன்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜூலை 12, 13ல் கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 8, சின்ன கல்லார், மேல்பாவனி, பந்தலூரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 13ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 12, 13ல் கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளைய தினம் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகம், ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும். ஜூலை 11 முதல் 13 வரை மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் வேகத்தில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications