சி.டி. மணி, மன்னார்குடி பேராசிரியர்...9 ஆண்டுகளாக நீடிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு மர்மங்கள்
சென்னை: தமிழகத்தையே அதிரவைத்த திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் எந்த ஒரு துப்புமே கிடைக்காமல் 9 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது சென்னையில் சிக்கி இருக்கும் ரவுடி சி.டி. மணியிடம் நடத்தப்படும் விசாரணை மூலமாக ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
2011 சட்டசபை தேர்தல்.. ஶ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டார். அத்தொகுதியில் பிரசாரம் செய்த ஜெயலலிதா கடுமையாக தாக்கிப் பேசியது திருச்சி கே.என். ராமஜெயத்தைத்தான்.... ஶ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா VS ராமஜெயம் என்கிற அளவுக்கு கடும் போட்டி உருவாக்கப்பட்டது. அந்த அளவுக்கு திருச்சி சுற்றுவட்டாரத்தில் செல்வாக்குடன் திகழ்ந்தவர் ராமஜெயம்.
தற்போதைய அமைச்சர் கே.என்.நேருவின் நிழலாக திகழ்ந்தவர் ராமஜெயம். நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்த போதும் சுரங்கங்கள், குவாரிகள், கல்வி நிறுவனங்கள் என பல தொழில்களில் கோலோச்சியவர் ராமஜெயம். பொதுவாக திருச்சி அரசியல் வட்டாரங்களில் எம்.டி. என்றால் அது ராமஜெயத்தைதான் குறிக்கும்.

கோரமாக படுகொலை
அப்படி செல்வாக்கான நபராக இருந்த ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அதிகாலையில் வாக்கிங் சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது உடல் முட்புதர் ஒன்றில் உடல் கட்டப்பட்ட நிலையில்தான் மீட்கப்பட்டது. ஆம் ராமஜெயம் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். ஆனால் ராமஜெயத்தை கடத்தி படுகொலை செய்தவர்கள் யார்? என்பதற்கு மட்டும்தான் இதுநாள் வரை விடை ஏதும் இல்லை.

எத்தனை கதைகள்!
ராமஜெயம் கொலை வழக்கில் போலீசார் விசாரணை நடத்திய கோணங்கள் மட்டும் பல நூறு... அப்படி ஒவ்வொரு கோணத்துக்கும் ஒவ்வொரு கதை சொல்லப்பட்டது. அந்த ஒவ்வொரு கதையையும் வைத்து இப்போதைக்கு OTT-ல் பல மாதங்களுக்கு வெப் சீரிஸ் எடுக்கலாம். அந்த அளவுக்கு பல திருப்பங்கள்.

பிரேத பரிசோதனை அறிக்கை
ராமஜெயம் படுகொலை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில் 3 விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தன. சயனைடு கொடுத்து கொல்லப்பட்டார்; கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது; பின்மண்டையில் தாக்கப்பட்டிருந்தது. இப்படி கொடூரமாக கொலை செய்தவர்கள் யாராக இருக்கும் என்பதைத் தவிர ஏகப்பட்ட திசை திருப்பல்களும் இந்த வழக்கில் அரங்கேற்றப்பட்டன. ஒருகட்டத்தில் ராமஜெயம் குடும்பத்தினரையே சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்தனர் போலீசார்.

சி.டி. மணியும் முக்கிய புள்ளியும்
பின்னர் ராமஜெயம் படுகொலை வழக்கில் உண்மையை கண்டறிய கோரி நீதிமன்ற வழக்குகளும் தொடரப்பட்டன. சிபிசிஐடி, சிபிஐ என பல அமைப்புகள் விசாரித்தன. ஆனால் எந்த விசாரணையிலும் ஒரு முன்னேற்றமும் இல்லை. இப்போது சென்னையில் சிக்கியிருக்கும் சிடி மணி என்கிற ரவுடியிடம் சிறையில் போலீசார் விசாரித்தனர். அப்போது முக்கிய புள்ளி ஒருவருக்காகவே சிடி மணி கோஷ்டி ராமஜெயத்தை படுகொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகமும் கூறப்பட்டது. ஆனாலும் சிடி மணியிடம் நடத்தப்பட்ட அந்த விசாரணை என்ன ஆனது என்பதே தெரியாமல் போனது.

மன்னார்குடி பேராசிரியரும் கொலை வழக்கும்
அதேபோல் படுகொலைக்கு முதல் நாள் சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் வந்தார் ராமஜெயம். அப்போது அவருடன் உடன்வந்ததாக சொல்லப்படுகிறவர் 'மன்னார்குடி பேராசிரியர்'. அந்த மன்னார்குடி பேராசிரியரிடம் ஒருநாள் ஒருபோதும் விசாரணையே நடத்தப்படாமல் ஒட்டுமொத்தமாக ராமஜெயம் கொலை வழக்கு பக்கங்களில் இருந்தே அசால்ட்டாக நீக்கப்பட்டார் மன்னார்குடி பேராசிரியர்.

சாமியார் கண்ணன்
அதேபோல் சில காலம் ஆறு கொலைகள் வழக்கில் சிக்கிய சாமியார் கண்ணன் என்பவர் பெயரும் கூட இந்த வழக்கில் பேசுபொருளாக இருந்தது. ஆனால் சி.டிமணி முக்கிய புள்ளிக்காகதான் ராமஜெயத்தை கொலை செய்தாரா? மன்னார்குடி பேராசிரியரின் மர்மம் என்ன? என்பது தொடர்பாக எந்த தகவலும் இதுவரையிலும் வரவில்லை. இப்போதைய திமுக ஆட்சியிலாவது 9 ஆண்டுகள் கிடப்பில் கிடக்கும் ராமஜெயம் கொலை வழக்கின் ஆதி அந்தம் முதல் திரைமறைவு அரண்மனை சதிகள் வரை அத்தனையும் அம்பலத்துக்கு வரக்கூடும் என்றுதான் தெரிகிறது. இதற்கான முதல்படிதான் சென்னை ரவுடி சி.டிமணியின் கைது என்று சொல்லப்படுகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications