வானில் நடக்கும் அரிய நிங்கலூ சூரிய கிரகணம்.. இந்தியாவில் தெரியாது.. அப்போ எந்த நாட்டில் பார்க்கலாம்?
சென்னை: இயற்கை பேரதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. இந்திய நேரப்படி காலை 7.04 மணிக்கு தொடங்கிய நிங்கலூ சூரிய கிரகணம் நண்பகல் 12.29 மணிக்கு முழு சூரிய கிரகணமாக ஏற்படும்.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஒரே நேர்க்கோட்டில் வரும் போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் என்றும் பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திர கிரகணம் என்று சொல்லப்படுகிறது.

ஆண்டு தோறும் சராசரியாக 4 கிரகணங்கள் ஏற்படுவதுண்டு. சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்றும் ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும். இயற்கை பேரதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த சூரிய கிரகணம் இன்று ஏற்பட இருக்கிறது.
இது ஹைபிரிட் சூரிய கிரகணமாக ஏற்பட இருக்கிறது. நிங்கலூ கிரகணம் என்றும் இது அழைக்கபப்டுகிறது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வு என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பிர்லா கோளரங்க அதிகாரிகள் கூறுகையில், " ஹைபிரிட் சூரிய கிரகணத்தை பகுதி அளவாகவோ, முழுமையாகவோ இந்தியாவின் எந்த பகுதியிலும் பார்க்க முடியாது. ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் கிரகணத்தை நன்றாக பார்க்கலாம்.
இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.04 மணிக்கு தொடங்கும். நண்பகல் 12.29 மணிக்கு முழு சூரிய கிரகணமாக ஏற்படும். ஆசியாவின் கிழக்கு கடல் ஓரம் அண்டார்டிகா போன்ற இடங்களில் சூரிய கிரகணம் தெரியும். அதிகபட்சமாக 1 நிமிடம் 16 வினாடிகள் மட்டுமே முழு சூரிய கிரகணம் இருக்கும்.
இந்த ஹைபிரிட் சூரிய கிரகணம் முழு சூரிய கிரகணமாக தோன்றுகிறது. வானத்தில் சில நிமிடங்களுக்கு முழு இருளையும் நெருப்பு வளையத்தையும் கொண்டு வரும். நிலா சூரியனை கொஞ்சம் மறைக்கும் போது நெருப்பு வளையம் போல காணப்படும்.
எனினும் இந்த ஹைபிரிட் சூரிய கிரகணத்தை பகுதி அளவாகவோ, முழுமையாகவோ இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் இந்த கிரகணத்தை சிறப்பாகப் பார்க்க முடியும். நிங்கலூ கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது என்றாலும் இணையதளம் மூலம் காணமுடியும்" என்று தெரிவித்தனர்.
இந்த நிங்கலூ சூரிய கிரகணத்தை 'தென்கிழக்கு ஆசியா, கிழக்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இருந்தால் பகுதி அளவாக காண முடியும்' என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications