ஆபாச மெசேஜே எனக்கு வரலைனு கள்ளக்குறிச்சி ஆட்சியர் சொன்னால்! கனிமொழி என்ன செய்வார்? நிர்மல் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனக்கு எந்த ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பிவில்லை என ஆட்சியர் மறுப்பு சொல்லிவிட்டால் திமுக எம்பி கனிமொழி என்ன செய்வார் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தை கனிமொழி அரசியலாக்கிவிட்டார் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை முதல்முதலில் கனிமொழிதான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் இன்று 3ஆவது நாளாக ஆலோசனை கூட்டம் நடந்தது. சுமார் இரண்டரை மணி நேரம் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, உளவுத் துறை ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சில அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

kanimozhi

இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகத்தான் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக திமுக மிகப் பெரிய கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். பெரியளவில் ஒரு பிரச்சாரத்தை உருவாக்க பார்க்கிறார்கள். முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 19 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6500 வழக்குகள்

இதுவரை எந்த ஆட்சியிலும் இதுவரை நடந்ததில்லை. 6500 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2800 போக்சோ வழக்குகள் மே 10-ஆம் தேதி தவெக அரசு பொறுப்பேற்பதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது எங்கள் ஆட்சியில் வழக்கு போடப்பட்டுள்ளது.

தவறும் நடைபெறவில்லை

எனவே எந்த தவறும் நடைபெறாத வண்ணம் துரிதமாக செயல்பட காவல் துறையினருக்கு 100 சதவீதம் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. போதை பொருள் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கடந்த திமுக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் 5600 ஆகும். தற்போது தவெக ஆட்சியில் 9600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆட்சியை காட்டிலும் 60 சதவீதம் அதிகம். கடந்த ஆட்சியில் 8600 பேர் கைதாகியுள்ளனர். இந்த ஆட்சியில் 14 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்காதலால் கொலை

அண்மையில் நடந்த கொலைகள் எல்லாம் முதல்முறையாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். மது போதை, கள்ள உறவு, முன்விரோதம் உள்ளிட்டவைகளால் நடந்தது. இந்த 6 மாத ஆட்சியில் 11 கொலைகள் ரவுடிகளால் நடந்தது. அந்த 11 கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

10000 பேர் நியமனம்

காவல் துறையில் ஆள்கள் பற்றாக்குறையை போக்க 10 ஆயிரம் பேர் நிரப்பப்படுவார்கள். கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தை திமுக எம்பி கனிமொழிதான் அரசியலாக்கிவிட்டார். சமூகவலைதளங்களில் வருவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?

அரசியலாக்கும் கனிமொழி

சமூகவலைதளத்தில் வந்த தகவலை கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஒரு வேளை அது போல் எந்த ஆபாச மெசேஜும் எனக்கு வரவில்லை என ஆட்சியர் கூறிவிட்டால் கனிமொழி என்ன செய்வார்? கனிமொழி சொன்னது போல் எந்த சம்பவமும் நடக்கவில்லை.

துணை சபாநாயகர் விவகாரம்

அது போல் துணை சபாநாயகர் விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அந்த சம்பவத்தில் முதலில் புகார் கொடுத்த நபர் திடீரென மாற்றி பேசி வீடியோ வெளியிட்டார். பின்னர் மீண்டும் புகார் கொடுத்துள்ளார். அவரை திமுகவினர் செட் செய்து பேச வைத்துள்ளனர்" என தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள், "புகார் கொடுக்க வந்தவரை தாக்கலாமா?" என கேட்டனர். அதற்கு நிர்மல், சரி, தவறு என எதுவும் சொல்லாமல், "அந்த நபரும் நிறைய வார்த்தைகளை விட்டுள்ளார். எதுவாக இருந்தாலும் விசாரணைக்கு பிறகு தெரியவரும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+