மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தலைமை நீதிபதி அவமதிப்பு? நிர்மல் குமார் பதில் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி, தலைமை நீதிபதியை அவமதித்தாரா என்பது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார்.

அண்ணா சாலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "என் குடும்பத்தினருக்கே மதுரை கோயிலில் பாஸ் கொடுக்கவில்லை. யாருக்கு பாஸ் கிடைத்தது, கிடைக்கவில்லை என்ற விவரங்கள் எனக்கு தெரியாது.

Nirmal Kumar

மேலும் தலைமை நீதிபதியை ஜெகதீஸ்வரி அவமதித்தாரா என்பது எனக்கு தெரியாது, நான் அந்த இடத்தில் இல்லை. என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துத்தான் சொல்ல முடியும் என தெரிவித்திருந்தார்.

குடமுழுக்கு விழாவுக்கு வந்த தலைமை நீதிபதி அவமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி காத்திருக்கும் தகவலை முன் வரிசையில் இருந்த அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு அதிகாரிகள் சொன்ன போது, "தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன? என கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாவை ஒட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்ட நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த 8.4.2009 அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 11 முதல் 17-ஆம் தேதி வரை 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள் மற்றும் 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

புனித நீர் கலசங்களில் நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும், மேலும் 7 புண்ணிய நதிகளிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டிருந்தது. 9 வகையான தானியங்கள், மூலிகைப் பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் உள்ளிட்ட 96 வகையான ஹோமப் பொருட்களைக் கொண்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலை பூஜைகள் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டர்கள் பங்கேற்று பூஜைகளை முன்நின்று நடத்தினர்.

நேற்று காலை 7.40 மணிக்கு அருள்மிகு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து காலை 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், காலை 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 5 லட்சம் டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருக்கோவில் வளாகம், கோபுரங்கள், விமானங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண விளக்குகள் மற்றும் லேசர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கோவில் மேற்கூரையில் நின்று திருக்குட நன்னீராட்டு விழாவை காண்பதற்காக 9,000 பேருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் கூடும் சித்திரை வீதி, ஆவணி மூல வீதி மற்றும் மாசி வீதிகளில் 26 இடங்களில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. 40 இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+