நியூஸ் ரீடர் பணியில் 4 முறை ரிஜெக்ட் ஆனேன்! 800 குடும்பங்களை சேர்த்து வைத்தேன்! நிர்மலா பெரியசாமி
சென்னை: செய்தி வாசிப்பாளர் பணிக்கு சென்ற போது முதலில் என்னை நிராகரித்தார்கள். பிறகுதான் வாய்ப்பு கொடுத்தார்கள் என நிர்மலா பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் "சொல்வதெல்லாம் உண்மை" எனும் நிகழ்ச்சியின் மூலம் நான் 800 குடும்பங்களை சேர்த்து வைத்திருக்கிறேன் என்றும் பூரிப்புடன் தெரிவித்தார்.
இதுகுறித்து நிர்மலா பெரியசாமி, வாவ் தமிழா எனும் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சொல்வதெல்லாம் உண்மை தயாரிப்பு குழு பெரியது. அந்த நிகழ்ச்சி பிரபலமானதும் நிறைய பேர் தானாகவே வர தொடங்கிவிட்டார்கள்.

நான் அந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங்கிற்கு போனால் நிறைய பேர் பெட்டி படுக்கையுடன் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் எல்லா இடங்களுக்கும் போனோம், நிதி கிடைக்கவில்லை. கடைசியாக உங்களிடம் வந்திருக்கிறோம் என சொல்லும் போது எனக்கு பயமாக இருக்கும்.
ஏனென்றால் நமக்கு பொறுப்பு அதிகமாக இருக்கிறதே என்ற பயம்தான். நம்மிடம் எந்த அரசாங்க பொறுப்பும் இல்லை, நாம் ஒரு நிகழ்ச்சியை நடத்துபவர்தான். அதற்கு நான் என்னால் முடிந்தவரை உண்மையாக செய்ய வேண்டும்.
அந்த குழுவினர் எனக்கு நிறைய சப்போர்ட் செய்தார்கள். 800 குடும்பங்களுக்கு மேல் நான் சேர்த்து வைத்திருக்கிறேன் என்ற பெரிய திருப்தி எனக்கு இருக்கிறது.
நான் செய்திகளை வாசித்தது சன் தொலைக்காட்சியில்தான்! நான் படித்த செய்திகள் நினைவிருக்கிறது. ஆனால் முதல் செய்தியாக எதை படித்தேன் என எனக்கு நினைவில்லை. ஒரே வாரத்தில் எல்லாரும் நிர்மலா பெரியசாமியை தெரிந்து கொண்டார்கள்.
சென்னையில் செய்தி வாசிப்பாளர் பணிக்கு 4 முறை நான் நிராகரிக்கப்பட்டேன். செய்தி வாசிப்பாளர் பணியில் 3 நிலைகள் தேர்வு உள்ளன. முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்காணல் ஆகிய 3 தேர்வுகள் நடத்தப்படும். எல்லாவற்றிலும் நான் தேர்வாகிவிடுவேன். ஆனால் கடைசியில் தேர்வு செய்யப்பட்டவர்களின் லிஸ்டில் என் பெயர் இருக்காது.
அதுவரை நான் பொறுமையாக என் தகுதிகளை வளர்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சன் டிவியில் சென்ற நாளே நான் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டேன். எனவே எல்லாவற்றிற்கும் பொறுமையாக இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இவ்வாறு நிர்மலா பெரியசாமி தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தை தட்சிணாமூர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இவர் பிஎஸ்என்எல் ஊழியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்னேஷ் என்ற ஒரு மகன் உள்ளார்.
இரு ஆண்டுகள் நிர்மலா ஆசிரியராக பணியாற்றினார். பொதிகை தொலைக்காட்சியில் 7 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியிருந்தார். பின்னர் சன் டிவிக்கு வந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவருடன் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபுவும் இணைந்தார். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திர பேச்சாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் இருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications