அரசியலில் இதெல்லாம் சகஜம், டேக் இட் ஈஸி.. சாரி கேட்ட குஷ்புவுக்கு நிர்மலா சீதாராமனின் ஷாக் ஆறுதல்!
சென்னை: அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் , ஐயாம் வெரி சாரி என கேட்ட குஷ்புவுக்கு அவரே ஷாக் ஆகும்படி ஆறுதல் கூறி அனுப்பியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
1980 களில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. இன்று வரை சின்னத்திரை, தயாரிப்பு, விளம்பரம் என பிஸியாக இருந்து வருகிறார். இவர் அரசியலிலும் ஜொலித்து வருகிறார். திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் பணியாற்றியிருந்தார்.
அத்தகைய சமயங்களில் விலைவாசி உயர்வு, நீட் தேர்வு, மீனவர் பிரச்சினை, ஹைட்ரோகார்பன் திட்டம், பிரதமரின் வெளிநாடு பயணம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை முன் வைத்து பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாஜகவில் இணைந்த குஷ்பு
பிரதமரையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் காங்கிரஸிலிருந்து கடந்த ஆண்டு விலகிய குஷ்பு பாஜகவில் இணைந்தார். அவருக்கு செய்தித் தொடர்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாரி கேட்கும் குஷ்பு
இந்த நிலையில் காங்கிரஸில் இருந்த போது அவர் விமர்சனம் செய்த பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை நேரில் பார்க்கும் போது அரசியல் ரீதியாக ஏதோ விமர்சனம் செய்துவிட்டேன், அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம் என குஷ்பு சாரி கேட்டு வருகிறாராம். மேலும் கட்சிக்கு புதிது என்பதால் அனைவருடனும் பழக முற்படுகிறாராம்.

புகைப்படம்
அந்த வகையில் அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். அவருடன் எடுததுக் கொண்ட புகைப்படத்தையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நிர்மலா சீதாராமனிடம், மேடம் நான் காங்கிரஸில் இருந்த போது ட்விட்டரிலும் பொதுக் கூட்டங்களிலும் உங்களை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டேன்.

குஷ்பு ஷாக்
அவையெல்லாம் அரசியல் ரீதியாக சொன்னதுதான். தனிப்பட்ட கருத்துகள் கிடையாது. எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களை அப்படி பேசியதற்கு நான் வருந்துகிறேன்.. ஐ யாம் வெரி சாரி என குஷ்பு கூறியிருக்கிறார். அதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குஷ்புவே ஷாக்காகும்படி ஒரு பதிலை கொடுத்துள்ளார்.

டேக் இட் ஈஸி!
நிர்மலா கூறுகையில் என்னை நீங்கள் விமர்சித்துள்ளீர்களா, நான் இதுவரை ஒரு முறை கூட உங்கள் ட்விட்டர் கருத்துகளை பார்த்தே இல்லையே. நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது. பரவாயில்லை. அரசியலில் இதெல்லாம் சகஜம். டோன்ட் வொரி, டேக் இட் ஈஸி என சொல்லி குஷ்புவுக்கு செம ஷாக் கொடுத்து அனுப்பியுள்ளாராம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications