ராஜ்ய சபாவில் இருந்து.. மீண்டும் அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்.. ஆனால்.. என்ன துறை ஒதுக்கப்படும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் நியமன எம்பிக்களுக்கு பெரிதாக அமைச்சரவை பதவிகள் கிடைக்க வாய்ப்பு குறைவு என்று எதிர்பாக்கப்பட்டது. அதை மீறி ராஜ்ய சபா எம்பி நிர்மலா சீதாராமன் அமைச்சராகி உள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின் நாட்டில் மைனாரிட்டி ஆட்சி அமைக்கப்பட உள்ளது. பாஜகவிற்கு தேர்தல் தோல்வியை விட மைனாரிட்டி ஆட்சி அமைப்பது என்பது மிக பெரிய தோல்வி.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congres

தோல்விக்கு காரணம்: பாஜகவின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பலர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பாஜகவின் தோல்விக்கு அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இது போக பாஜக தலைவர் நிர்மலா சீதாராமன் மீது டெல்லி பாஜக தலைமை கடும் கோபத்தில் இருக்கிறதாம். அவரின் ஜிஎஸ்டி கொள்கைகள் பாஜக தோற்க முக்கிய காரணமாக அமைந்தது. அவர் மக்கள் மீது மிக அதிகமாக வரி விதித்தது பாஜகவின் தோல்விக்கு மிக பெரிய காரணமாக அமைந்தது.

அவரின் செயல்பாடுகள், கோபமான பதில்கள், ஏழை மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாத செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. கொங்கு மண்டலத்தில் பாஜக மண்ணை கவ்வ ஜிஎஸ்டி ஒரு பெரிய காரணம்.

எண்டு கார்டு: இந்த நிலையில்தான் நிர்மலா சீதாராமனுக்கு எண்டு கார்டு போட பாஜக முடிவு செய்ததாக செய்திகள் வந்தன. அவருக்கு இந்த முறை அமைச்சர் பதவி உண்டு ஆனால் சிறிய பதவிதான். இதனால் இந்த முறை வேறு ஒருவர் நிதி அமைச்சர் ஆகிறார் என்று கூறப்பட்டது. பெரிதும் நியமன எம்பிக்களுக்கு பெரிதாக அமைச்சரவை பதவிகள் கிடைக்க வாய்ப்பு குறைவு என்று எதிர்பாக்கப்பட்டது. அதை மீறி ராஜ்ய சபா எம்பி நிர்மலா சீதாராமன் அமைச்சராகி உள்ளார்.

நிதி அமைச்சர்; இப்போது வரை பியூஷ் கோயல் நிதி அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வரும் நாட்களில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது வேறு ஒரு தமிழர்தான் நிதி அமைச்சர் ஆகிறார். இப்போது பியூஷ் கோயல் நிதி அமைச்சர் ஆகலாம். வரும் நாட்களில் ராஜ்ய சபா வழியாக நிதி அமைச்சர் ஆக உள்ளார். தமிழ்நாட்டை சேர்த்தவர் . நிதி விவரங்களை அறிந்தவர். பாஜகவில் அதிக வாய்ஸ் கொண்டவர். அவர் தனக்கு இருக்கும் லாபி வழியாக எம்பி ஆவார். அதன்பின் நிதி அமைச்சர் ஆவார் என்று கூறப்படுகிறது.

மற்றபடி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் பெரிய இடம் இருக்காது என்கிறார்கள். அவர் என்ன மாதிரியான லாபி செய்தாலும் அது பலன் அளிக்காது என்று கூறுகிறார்கள்.

அமைச்சரவை வாய்ப்பு: இன்று நாடு முழுக்க அனைவரின் பார்வையும் மோடியின் அமைச்சரவை பெர்த் ஒதுக்கீட்டில் உள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரம் ஆகிய முக்கியமான இலாகாக்களை வைத்திருப்பவர்கள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் ஆக போகும் எம்பிக்கள் பதவி ஏற்பார்கள்.

இந்த முக்கிய துறைகள் அனைத்தும் பாஜக வசம் தொடர்ந்து இருக்கும். எஃகு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் நிலக்கரி போன்ற முக்கியமான அமைச்சரவையை கைப்பற்ற போகும் அமைச்சர்களும் இன்று பதவி ஏற்க வாய்ப்புகள் உள்ளன.

யாரெல்லாம் அமைச்சர்கள்: லக்னோவில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நீடிக்க வாய்ப்புள்ளது. அமைச்சர்களாக போக வாய்ப்பு உள்ளவர்கள்.

இன்று அமைச்சர் ஆனவர்கள் லிஸ்ட்:

குஜராத்

அமித் ஷா (பாஜக)
எஸ் ஜெய்சங்கர் (பாஜக)
மன்சுக் மாண்டவியா (பாஜக)
சிஆர் பாட்டீல் (பாஜக)
நிமுபென் பாம்பானியா (பாஜக)

ஒடிசா

அஸ்வினி வைஷ்ணவ் (பாஜக)
தர்மேந்திர பிரதான் (பாஜக)
ஜுவல் ஓரம் (பாஜக)

கர்நாடகா

நிர்மலா சீதாராமன் (பாஜக)
எச்.டி.குமாரசாமி (ஜேடிஎஸ்)
பிரகலாத் ஜோஷி (பாஜக)
ஷோபா கரந்த்லாஜே (பாஜக)
வி சோமண்ணா (பாஜக)

மகாராஷ்டிரா

பியூஷ் கோயல் (பாஜக)
நிதின் கட்கரி (பாஜக)
பிரதாப் ராவ் ஜாதவ் (சிவசேனா)
ரக்ஷா காட்சே (பாஜக)
ராம் தாஸ் அத்வாலே (இந்திய குடியரசுக் கட்சி)

கோவா

ஸ்ரீபத் நாயக் (பாஜக)
ஜே & கே ஜிதேந்திர சிங் (பாஜக)

ஹிமாச்சல்

ஜேபி நட்டா (பாஜக)

மத்திய பிரதேசம்

சிவராஜ் சிங் சவுகான் (பாஜக)
ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக)
சாவித்ரி தாக்கூர் (பாஜக)
வீரேந்திர குமார் (பாஜக)

உத்தரபிரதேசம்

ஹர்தீப் சிங் பூரி (பாஜக)
ராஜ்நாத் சிங் (பாஜக)
ஜெயந்த் சௌத்ரி (RLD)
ஜிதின் பிரசாத் (பாஜக)
பங்கஜ் சவுத்ரி (பாஜக)
பிஎல் வர்மா (பாஜக)
அனுப்ரியா படேல் (அப்னா தால்-சோனிலால்)
கமலேஷ் பாஸ்வான் (பாஜக)
எஸ்பி சிங் பாகேல் (பாஜக)

பீகார்

சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி கட்சி-ராம் விலாஸ்)
கிரிராஜ் சிங் (பாஜக)
ஜிதன் ராம் மஞ்சி (இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா)
ராம் நாத் தாக்கூர் (ஜேடியு)
லாலன் சிங் (ஜேடியு)
நித்யானந்த் ராய் (பாஜக)
ராஜ் பூஷன் சௌத்ரி (விகாஷீல் இன்சான் பார்ட்டி)
சதீஷ் துபே (பாஜக)

அருணாச்சல

கிரண் ரிஜிஜு (பாஜக)
ராஜஸ்தான் கஜேந்திர சிங் ஷெகாவத் (பாஜக)
அர்ஜுன் ராம் மேக்வால் (பாஜக)
பூபேந்தர் யாதவ் (பாஜக)
பகீரத் சவுத்ரி (பாஜக)

ஹரியானா

எம்எல் கட்டார் (பாஜக)
ராவ் இந்தர்ஜித் சிங் (பாஜக)

கேரளா

சுரேஷ் கோபி (பாஜக)

தெலுங்கானா

ஜி கிஷன் ரெட்டி (பாஜக)
பாண்டி சஞ்சய் (பாஜக)

தமிழ்நாடு

எல் முருகன் (பாஜக)

ஜார்கண்ட்

சந்திரசேகர் சவுத்ரி (AJSU)
அன்னபூர்ணா தேவி (பாஜக)

ஆந்திரப் பிரதேசம்

டாக்டர். சந்திர சேகர் பெம்மாசானி (TDP)
ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு (TDP)
சீனிவாச வர்மா (பாஜக)

மேற்கு வங்கம்

சாந்தனு தாக்கூர் (பாஜக)
சுகந்தா மஜும்தார் (பாஜக)

பஞ்சாப்

ரவ்னீத் சிங் பிட்டு (பாஜக)

அசாம்

சர்பானந்தா சோனோவால் (பாஜக)
பபித்ரா மார்கெரிட்டா (பாஜக)
உத்தரகாண்ட் அஜய் தம்தா (பாஜக)

டெல்லி

ஹர்ஷ் மல்ஹோத்ரா (பாஜக)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+