தமிழகத்துக்கு நிதி கேட்பதை ஏளனமாக பேசிய நிர்மலா சீதாராமன்..தக்க பாடம் வெயிட்டிங்- கனிமொழி எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்பதை ஏரளனமாக பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பாஜகவுக்கும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி எம்பி கூறியதாவது: நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன், ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் பேசியதாவது
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனரஞ்சகமாக நாங்கள் இவ்வளவு பணம் கொடுக்கிறோம்.. நீங்க என்ன கொடுக்கிறீங்க என்ற வாதமே தப்பு.. அவங்க எடுக்கிற கால்குலேஷன் எங்க இருந்து வருதுன்னே புரியலை..
ஒருவிதமாக கொஞ்சம் ஏரளனமாக சொல்லனும்னா.. இங்க நிறையேபேர் கோயம்புத்தூர் காரங்க இருக்காங்க.. சென்னைக்காரங்க நீங்க எல்லாம் இருக்கீங்க.. கோயம்புத்தூரும் சென்னையும்தான் தமிழ்நாட்டுக்கு வரி கொடுக்குது.. அரியலூரில் இருக்கிறவங்களும் கோவில்பட்டியில் இருக்கிறவங்களும் எங்களுக்கு என்ன செலவு பண்றீங்கன்னு கேட்பாங்க.. இதற்கு கோயம்புத்தூர்காரங்களும் சென்னைகாரங்களும் நாங்கதான் வரி கொடுக்கிறோம்.. எங்களுக்குத்தான் திருப்பி கொடுக்கனும்னு.. கோவில்பட்டி எக்கேடுகெட்டா எனக்கு என்ன? நீங்க செலவு பண்ணாதீங்கன்னு சொல்லுவாங்க.. பாரத நாட்டில் அப்படியான பாலிசி இல்லை.. அதனால இந்த மாதிரி குதர்க்கமாக பேசக் கூடியவங்களுக்கு நான் சொல்றேன். இதெல்லாம் வெச்சுதான் தமிழ்நாட்டுக்கு என்ன வந்துகிட்டு இருக்குன்னு சொல்கிறோம்.
தமிழ்நாட்டில் செய்வதற்கு இன்னும் எத்தனையோ இருக்கிறது என்றாலும் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு என நம்மை திசை திருப்புகிற முயற்சிகள் நிறைய நடைபெறுகின்றன என்றார்.

மேலும்,
கடந்த பத்தாண்டுகளில், தமிழ்நாட்டில்,
- ஜன் தன் திட்டம்: 1.7 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. (58% பெண்கள்)
- பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன
- தூய்மை பாரத திட்டம்: 59 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
- ஜல் ஜீவன் இயக்கம்: 89 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- பிரதமரின் உஜ்வாலா திட்டம்: 41 லட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
- ஆயுஷ்மான் பாரத் திட்டம்: ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என்ற விகிதத்தில் 79 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
- 4,100 கி.மீ.க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன.
- 2014 முதல் 1,303 கி.மீ.க்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 2,242 கி.மீ. ரயில் வலையமைப்பு மின்மயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 94% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
- 54 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
- உதான் திட்டத்தின் கீழ், சேலம் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, அதே நேரத்தில் நெய்வேலி மற்றும் வேலூரில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள் உள்கட்டமைப்பு பணிகள்:
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) March 22, 2025
- 4,100 கி.மீ.க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன.
- 2014 முதல் 1,303 கி.மீ.க்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 2,242 கி.மீ. ரயில் வலையமைப்பு… pic.twitter.com/9iWp1IhfKO
கூடுதலாக பிரதமர் மோடி அரசு, மாநிலங்களுக்கு மூலதன செலவினத்திற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் மூலம் மூலதனச் செலவில் மாநில அரசுகளின் முதலீட்டை ஆதரித்துள்ளது. இதில் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு 50 ஆண்டு வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன.
- இந்த நிதியுதவி, நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் இல்லாமலேயே வழங்கப்பட்டுள்ளன. - 2020-21 மற்றும் 2023-24 க்கு கலக்கட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.14,900 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது என்றார் நிர்மலா சீதாராமன்.
தமிழ்நாட்டுக்கான வரிவருவாயைப் பெற்றுக் கொள்ளும் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கான பல்வேறு துறைசார் நிதிகளை வழங்க மறுக்கிறது என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் புகார். இதற்காக டெல்லியில் தமிழக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய நிதி அமைச்சர் ஏரளனமாக இதனை விமர்சித்ததால் கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications