விஜய்யை பார்த்து பயமா.. சட்டென திமுக பக்கம் காய் நகர்த்திய நிர்மலா சீதாராமன்.. செம ட்விஸ்ட்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக புகார் உள்ளது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன், விஜய் அரசியல் வருகையால் திமுக பயந்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தது தவெக. மற்ற கட்சிகள் எல்லாம் தேர்தல் பணிகளில் டாப் கியர் போட்டு பறக்கும் நிலையில், தவெக இப்போதுதான் தேர்தல் பணியை தொடங்கியுள்ளது.

விஜய்யை பார்த்து பயமா
தவெக 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய் திமுக மற்றும் அதிமுக குறித்து விமர்சித்திருந்தார். ஆனால் பாஜக குறித்து அவர் விமர்சிக்கவில்லை. ஜனநாயகன் படம் விவகாரம், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஆகியவை மூலம் விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்தது. ஆனால் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "விஜயால் எந்த தாக்கமும் இல்லை. அவருடன் கூட்டணியும் இல்லை" என்று அறிவித்திருந்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக நேர்காணல் வழங்கியுள்ளார். அப்போது அவரிடம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை பார்த்து பாஜக பயப்படுகிறதா என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு நிர்மலா சீதாராமன், "விஜய்யை பார்த்து திமுகதான் பயப்பட வேண்டும். என்னால் திமுக பயப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.
திமுகவுக்கு தான்
விஜய்யின் அரசியல் வருகை ஒருபுறம், அதிமுக - பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவடைவது மறுபுறம் ஆகியவற்றால் திமுக அச்சத்தில் உள்ளது. அதன் காரணமாக தான் திமுக அரசு இலவச திட்டங்களை அறிவித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதை கலாசாரம் தலைதூக்கியுள்ளது. அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என்று பதில் கூறினார்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications