எப்ப பார்த்தாலும் தமிழர் விரோதி பிரச்சாரமா.. சிஏ தேர்வு விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் பதில்
சென்னை: சிஏ பவுண்டேஷன் தேர்வு பொங்கல் பண்டிகை தினம் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாஜகவின் தமிழர் விரோத போக்கு என்றும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கொடுத்துள்ளார்.
பட்டயக் கணக்காளர் (CA) தேர்வு வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே தேதிகளில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்தத் தேதியில் சிஏ தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இதுகுறித்து சிபிஎம் கட்சியின் மூத்த நிர்வாகியும், மதுரை தொகுதி எம்பியுமான சு. வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பொங்கல் திருநாளன்று சிஏ தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு.
பொங்கல் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள். தேதிகளை மாற்ற ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். சிஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அறுவடைத் திருநாளான பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
இதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பிஐ தேர்வு இறுதிச்சுற்றி பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்டது. சுமார் 6,000க்கும் மேற்பட்டோர் அந்தத் தேர்வு எழுதினர். அப்போது நாங்கள் தீவிரமாக போராட்டம் நடத்தினோம். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போது அறிவித்தார்.
இப்போது நிர்மலா சீதாராமன் வசமுள்ள துறையில் மீண்டும் அதேபோன்று அறிவிக்கப்பட்டுள்ளது. துர்கா பூஜை அல்லது தீபாவளி பண்டிகையின்போது ஒன்றிய அரசு இதுபோல தேதி அறிவிக்க முடியுமா. பொங்கல் பண்டிகையில் சிஏ தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். " என்று கூறியுள்ளார்.
இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாஜக அரசு தமிழர் விரோத போக்கில் ஈடுபடுவதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அதேநேரத்தில் பாஜகவினர் இதற்கு பதில் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா, தன் எக்ஸ் பக்கத்தில், "இதே பொங்கல் தான் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி, வட இந்தியாவில் லோஹ்ரி, உ.பியில் கிச்சடி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி, ஹரியானா பஞ்சாப்பில் மாஹி என கொண்டாடப்படுகிறது. அப்படி இருக்கும்போது இது எப்படி தமிழருக்கு மட்டும் எதிரானதாகும்.
மேலும் சிஏ தேர்வு தேதியை மத்திய அரசு முடிவு செய்வதில்லை. ICAI என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு தான் நடத்துகிறது." என்று கூறினார். இந்தப் பதிவை ரீ-போஸ்ட் செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரச்சாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது." என்று கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் அந்தப் பதிவில் தமிழ் விரோதி பிரச்சாரம் என்பதை 'ப்ரசாரம்' என்று பிழையுடன் குறிப்பிட்டுள்ளார். இதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications