எடப்பாடியை கடுப்பாக்க திட்டமா.. மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது என்ன.. நிர்மல்குமார் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து 6 மாதங்களாகியும் தமிழக அரசியலின் பரபரப்பு ஓயவில்லை. 50 ஆண்டு கால அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த திமுக மற்றும் அதிமுக இணைந்து தவெகவை மாறி மாறி விமர்சனம் செய்கிறார்கள். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தபோது, மின்சாரம் தடைபட்டது. சாமியை கூட நிம்மதியாக கும்பிட முடியவில்லை. திட்டமிட்டு சதி செய்கிறார்கள் என தவெகவை எடப்பாடி விமர்சித்திருந்தார். மீனாட்சி அம்மன் கோயிலில் என்ன நடந்தது என்று அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் கோரிபாளையத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இன்றைக்கு மதுரை சுற்றுவட்டார பகுதிகளுக்கு நிறைய விஐபிகளின் வருகை உள்ளது. நேற்று காலையில் இருந்து மீனாட்சி அம்மன் கோயிலில் ஜெனரேட்டர் மூலம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலையே அதை உறுதிபடுத்திவிட்டோம். காலை வரை அந்தப் பணிகள் தொடர்ந்துள்ளன.

nirmalkumar-explain-over-power-cut-in-meenatchi-amman-temple-while-edappadi-palanisamy-visit

பராமரிப்பு பணி

அந்த பணிகள் முடிந்து ஜெனரேட்டிரில் இருந்து மெயின் லைனுக்கு இணைப்பு மாற்றியுள்ளனர். அப்போதுதான் 7 - 8 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார இணைப்பை மாற்றும் நேரத்தில் இது நடந்துள்ளது. மின்சார வாரியத்தின் தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளனர். பிரச்சனை இப்போது சரி செய்யப்பட்டவிட்டது. விஐபி வருகைகள் அதிகம் இருப்பதால் பராமரிப்பு பணி நடந்தது. வேறு எதுவுமில்லை.

ஜெனரட்டிரில் பராமரிப்பு நடந்து, மெயின் லைனுக்கு மாற்றுவது குறித்து முறையான தகவல் தொடர்பு இல்லாமல் இருந்தனர். காலை வரை ஜெனரேட்டரில் இயங்கி கொண்டிருந்தது. மின் வெட்டோ, வேண்டுமென்றே செய்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் உண்மையில்லை. தமிழ்நாடு முழுவதுமே இந்த நிலை அல்ல. நிறைய இடங்களில் விஐபிகள் வரும்போது வேண்டுமென்றே இப்படி செய்வதாக கூறுகிறார்கள். இதை நாங்கள் குறிப்பிட்டால் சரியாக இருக்காது.

எடப்பாடிக்கு கோபம்

பலமுறை சொல்லியும் மீண்டும் மீண்டும் அதே விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். மின்சாரத்துறையை வேண்டுமென்றே குறி வைக்கிறார்கள். நிறைய இன்டர்னெல் மீட்டிங்குகள், பணியிட மாற்றங்கள் செய்துவிட்டோம். எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாங்கள் யாரையும் குறை சொல்ல மாட்டோம். அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வோம். எடப்பாடியை பற்றி நாங்கள் வைக்கும் சில விமர்சனங்கள் அவருக்கு கோபத்தை கொடுக்கலாம். நீண்ட கால அடிப்படையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+