பாலியல் கேஸில் சிக்கிய பிரபலம் நிஷா ரஃபேல்.. அதுவும் 11 வயது சிறுவனை! இவர் மோடிவேஷன் ஸ்பீக்கர் ஆச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோஷியல் மீடியாவில் மோடிவேஷனல் பேச்சுகள் மூலம் நிறைய பேரின் கவனத்தை ஈர்த்தவர் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் நிஷா ரஃபேல்.. புதுவிதமான கற்பித்தல் முறை, ஸ்பிரிட் தரும் அளவுக்கு உற்சாகமான பேச்சுக்கள் என்று பிரபலமானவர் இந்த நிஷா.. இவர் மீதுதான், இப்போது பாலியல் புகார் கிளம்பி உள்ளது.. 11 வயது சிறுவனுக்கு இவர் பாலியல் தொல்லை தந்துள்ளாராம்.. இந்த புகாரை கிளப்பியது சம்பந்தப்பட்ட சிறுவன்தான்.. இதையடுத்து, இந்த விவகாரத்தில் நிஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன், தன்னிடம் டாக்டர் நிஷா ரஃபேல் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதைக்கேட்டு கொந்தளித்து போன சிறுவனின் பெற்றோர், உடனடியாக மேற்கு திருச்சூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

Nisha Raphael POCSO Case

இந்த புகாரின் அடிப்படையில், சிறுவனை திருச்சூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில் சிறுவன் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளானதற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டன.. இதையடுத்து நிஷா ரஃபேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது சிறுவன் புகார் தந்த மறுநாளே, நிஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யார் இந்த நிஷா ரஃபேல்?

கேரளாவில் பொருளாதார பாடப் பிரிவு ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் டாக்டர் நிஷா ரஃபேல். யூடியூபில் சுமார் 1.27 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் சுமார் 3.76 லட்சம் பேரும் இவருக்கு ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர்.. தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சுகள், வித்தியாசமான கற்பித்தல் முறை போன்றவற்றின் மூலம் சோஷியல் மீடியாவில் வெகு சீக்கிரத்தில் பிரபலமானவர்.. இப்படிப்பட்டவர் மீது பாலியல் புகார் எழுந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது..

ஃபிளாட் தகராறு

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிஷா ரஃபேல் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. புகார் அளித்தவருக்கும் நிஷாவுக்கும் இடையே அப்பார்ட்மென்ட் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தகராறு இருந்து வருகிறதாம்.. அந்தப் பகை காரணமாகவே இப்போது திட்டமிட்டு பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறுவனின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இப்போது நிஷா சொன்ன சொத்து தகராறின் பின்னணியையும் விசாரிக்க முடிவு செய்தள்ளனர்..

தற்போது திருச்சூர் மேற்கு போலீசார் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிறுவனின் வாக்குமூலத்தையும் பதிவு செய்து விட்டார்களாம்.. விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதாக அர்த்தமல்ல. புகாரின் உண்மைத் தன்மை, நிஷா தரப்பு முன்வைக்கும் விளக்கம், மெடிக்கல் செக்கப் உள்ளிட்ட ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.. இருந்தாலும் பெண் பிரபலம் ஒருவர் மீது, போக்சோ கேஸ் பதிவாகியிருப்பது அவரது ஃபாலோயர்ஸ்களுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+