ரூ. 100 கோடிக்கு புதிய ஆடி கார் வாங்கிய நீடா அம்பானி? காரில் உள்ள வசதிகளை கேட்டால் ஆடிப்போய்டுவீங்க
சென்னை: ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி (nita ambani) ரூ.100 கோடி மதிப்பில் ஆடி கார் ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உலகிலேயே வெறும் 11 பேர் மட்டுமே இந்த காரை வைத்துள்ளனர். நீடா அம்பானியின் இந்த புதிய ஆடி கார், அடிக்கடி கலரை தானாகவே மாற்றிக்கொள்ளும். காரின் ரூப் முதல் விண்டோ ஸ்க்ரீன் வரை ஒரே கண்ணாடியாலானது. இதனால் இந்த காரை பார்க்கும் போது ஒரு விண்கலம் போல காட்சியளிக்கிறது.
இந்தியா மட்டுமின்றி ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆக இருப்பவர் முகேஷ் அம்பானி. உலக பெரும் பணக்காரர்களில் பட்டியலிலும் இடம்பிடித்து இருக்கும் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு மட்டும் சுமார் 10.25 லட்சம் கோடியாகும்.

நீடா அம்பானி சொத்து மதிப்பு
இந்தியாவில் தொலைத்தொடர்பு, எண்ணெய், ரீடெயில் என பல தொழில்களில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கோலோச்சி வருகிறது. அம்பானியின் மனைவி நீடா அம்பானி. இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார். நீடா அம்பானியின் சொத்து மதிப்பு மட்டு சுமார் 2,340 கோடிக்கு மேல் இருக்கும்.
ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் பவுண்டோஏஷன் உள்ளிட்டவற்றில் மிக முக்கிய பொறுப்பை வகிக்கும் நீடா அம்பானி, தனது வசதிக்கு ஏற்றார்போல் ஆடம்பர பொருட்களையும் அதிகம் பயன்படுத்துவதை பார்க்க முடியும். நீடா அம்பானியின் கைக்கடிகாரம் முதல் ஹேண்ட் பேக் வரை அனைத்தும் பல கோடிகள் மதிப்புள்ளவையாகும். அதேபோல ஆடி, பிஎம்டபிள்யூ என உலகின் டாப் மாடல் சொகுசு கார்களை வைத்து அம்பானியின் குடும்பத்தினர் பயன்படுத்தி வருகிறார்கள்.
ரூ. 100 கோடி மதிப்புள்ள கார்
ரோல்ஸ் ராய்ஸ் உள்பட பல சொகுசு கார்கள் உள்ள நிலையில், தற்போது நீடா அம்பானி வாங்கியிருக்க கூடிய கார் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தியாவிலே மிக அதிக விலை கொண்ட கார் இதுதான் என்று செய்திகள் உலா வருகின்றன. அதவாது தற்போது புதிதாக ஆடி நிறுவனத்தில் Audi A9 Chameleon- என்ற காரை நீடா அம்பானி வாங்கியிருக்கிறார். இதன் மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதன் மதிப்பு மிக மிக அதிகம் என்பதால் நெட்டிசன்கள் வாயை பிளக்க வைத்துள்ளது இந்த காரின் விலை. அப்படி என்னதான் இந்த காரில் உள்ளது என தேடி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். நீடா அம்பானியின் இந்த புதிய ஆடி கார், அடிக்கடி கலரை தானாகவே மாற்றிக்கொள்ளும்.
காரில் உள்ள வசதிகள்
ஒரே ஒரு பட்டனை கிளிக் செய்தால் காரின் மொத்த நிறமும் மாறிவிடும். உலக அளவில் வெறும் 11 கார்கள் மட்டுமே இந்த மாடலில் உள்ளதாம். காரின் ரூப் முதல் விண்டோஸ்க்ரீன் வரை ஒரே கண்ணாடியாலானது. இதனால் இந்த காரை பார்க்கும் போது ஒரு விண்கலம் போல காட்சியளிக்கிறது. 5 மீட்டர் நீளம் கொண்ட இந்த காருக்கு மொத்தம் இரண்டு கதவுகளே உள்ளன.
என்ஜின் திறன் என்று பார்த்தால் 4.0 லிட்டர் வி8 மாடல் என்ஜின் ஆகும். 600 குதிரை திறன் கொண்ட இந்த கார் உலக அளவில் மேம்பட்ட ஒன்றாகும். 0 டூ 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3.5 வினாடிகள் எட்டிவிடும். இது அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
நீடா அம்பானியிடம் உள்ள கார்கள்
நீடா அம்பானியிடம் இந்த ஆடி ஏ9 சேம்லான் ரக கார் மட்டுமின்றி மேலும் பல ஆடம்பர கார்கள் உள்ளன. ரோல் ராய்ஸ் Phantom VIII EWB, மெர்சிடஸ் Maybach S600, பெராரி 812 சூப்பர் பாஸ்ட், பெண்ட்லே காண்டினெண்டல் பிளையிங் ஸ்பர், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன், பிஎம்டபிள்யூ 7 சீரியஸ் 760 லி செக்யூரிட்டி உள்ளிட்ட கார்களும் அவரிடம் உள்ளன.
அதேவேளையில், நீடா அம்பானி இப்படியான ஒரு காரை வாங்கியதாக பரவும் தகவல் உண்மையில்லை எனவும் ஒரு செய்தி உலா வருகிறது. எது எப்படியோ.. 100 கோடி என்ன.. அதற்கு இரு மடங்கு விலை இருந்தாலும் வாங்கும் திறன் உள்ளவர்தான் நீடா அம்பானி என நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications