நீதா அம்பானி கழுத்தை பார்த்தீங்களா? சதுர்த்தி விழாவில் மொத்த பேரின் பார்வையை பறித்த ராயல் நெக்லஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பானி வீட்டு நிகழ்வு எதுவானாலும், அது மீடியாவில் பரபரப்பாக மட்டுமல்லாமல் ஆச்சரியமாகவும் பேசப்பட்டுவிடும். இப்போதும் அப்படித்தான் ஒரு விஷயம் இணையத்தில் பரவி, பலருக்கும் திகைப்பை உண்டுபண்ணி வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த மும்பை வட்டாரத்தையே மூச்சுமுட்ட வைக்கும் அளவுக்குப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதா அம்பானியை பொறுத்தவரை எப்போதுமே ஆரம்பரமான பொருள்களையே பயன்படுத்துவார்... காஸ்ட்லி வாட்ச்கள், காலணிகள், ஹேண்ட்பேக்குகள், அவ்வளவு ஏன், வீட்டில் பயன்படுத்தும் காபி மக்குகள் வரை பெரிய பிராண்டுகளையே பயன்படுத்துபவர்..

Ambani Necklace Fashion

நீதா அம்பானி ராயல் நெக்லஸ்

நீதா அம்பானி பிரபலமான பெண்மணி என்பதால், அவரது நடை, உடை, வாழ்க்கை முறையே தனித்துவம் நிறைந்தவை என்பதால், அனைத்துமே இணையத்தில் வைரலாகிவிடும். இப்போதும் மும்பையில் உள்ள அம்பானி குடும்பத்தின் இல்லமான ஆன்டிலியாவில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.

Antilia Cha Raja என்று என அழைக்கப்படும் இந்த விநாயகர் தரிசனத்துக்கு வந்த விருந்தினர்களை நீதா அம்பானி வரவேற்றார். அனைவரையும் வரவேற்க நீதா அம்பானி காலடி எடுத்து வைத்த நொடியிலிருந்தே, அங்கிருந்த கேமராக்களின் பிளாஷ் லைட்டுகள் இடைவிடாமல் பளிச்சிட துவங்கின. காரணம், இந்த விழாவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது அவரது காஸ்ட்லி டிரஸ்ஸும், அதைவிட பிரம்மாண்டமாக இருந்த அந்த ராயல் லுக் நெக்லஸும்தான்.

கழுத்திலிருந்து தோள்கள் வரை ஒட்டுமொத்த உடலையும் மறைக்கும் விதமாக அமைந்திருந்த அந்த ஆபரணம், அப்படியே அவரை ஒரு மகாராணியாகவே காட்டியது.

சில்க் புடவை, அலங்காரங்கள்

நீதா அம்பானி ஆரஞ்சு, ஃபுச்சியா பிங்க், அடர் மெஜந்தா என கலர்ஃபுல்லான கலவையில் அமைந்திருந்த ஆடம்பரமான சில்க் புடவையை அணிந்திருந்தார். இருந்தாலும் புடவையை விட கழுத்தில் அணிந்திருந்த நகையே தனியாக ஒரு கவனத்தை ஈர்த்தது. சாதாரண நெக்லஸ் போல இல்லாமல், அவரது கழுத்து, தோள்கள் மற்றும் மார்பின் மேற்பகுதி வரை பரந்து விரிந்திருந்தது அந்த நகை. நுணுக்கமான வேலைப்பாடுகளும், கீழே தொங்கியபடி இருந்த பல்வேறு அலங்காரங்களும் பிரம்மாண்டமான லுக்கை தந்தன.

இந்த நகையின் பின்னணியிலும் ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. அம்ரபாலி ஜூவல்ஸின் Bharata கலெக்ஷனில் இடம்பெற்ற இந்த நகையை செய்வதற்கு டிசைனிங் தரப்பட்டுள்ளது.. இந்த டிசைனிங்கை தருவதாக 3 வருடங்கள் ஆயிற்றாம்..

அதற்கு பிறகு 14 கைவினைக் கலைஞர்கள் இணைந்து 6 மாதங்களில் இதை உருவாக்கியுள்ளனர். பழைய நாத், புதிய பாசா, பழைய தென்னிந்திய நெக்லஸ் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நகை அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

கை நிறைய வளையல்கள், மோதிரங்கள்

அத்துடன், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட தங்க கம்மல்கள், கை நிறைய அடுக்கடுக்கான தங்க வளையல்கள், ஸ்டேட்மென்ட் மோதிரங்களை நீதா அம்பானி அணிந்திருந்தார்.. அவரது கையிலிருந்த பொட்லி வகை பையும், அவரது புடவைக்கு மேட்ச்சிங்காக இருந்தது. தங்க நிற எம்பிராய்டரி மற்றும் மெட்டாலிக் அலங்காரங்கள் கொண்ட அந்த பர்ஸும், அவரது பாரம்பரிய தோற்றத்துக்கு மேலும் அழகு சேர்த்தது.

அதேபோல அவரது ஹேர்ஸ்டைலும் கவனம் பெற்றது. தலைமுடியை நீண்ட பின்னலாக பின்னியிருந்த நீதா அம்பானி, நெற்றியில் சிவப்பு பொட்டு வைத்து, கிளாமர் மேக்கப்புடன் விழாவுக்கு வந்திருந்தார். பாரம்பரிய புடவை, பின்னல், பொட்டு என பாரம்பரிய தோற்றத்தில் காணப்பட்டாலும், பிரம்மாண்ட நகை மற்றும் அணிகலன்கள் மூலம் தனது வழக்கமான ஆடம்பரமான ஸ்டைலையும் விடுவதாக இல்லை.

ஆண்டிலியாவில் நடைபெற்ற இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் அம்பானி குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பல பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர். எத்தனை பேர் வந்திருந்தாலும், எவ்வளவு பிரம்மாண்டமாக விழா நடந்தாலும், நீதா அம்பானியின் நெக்லஸ் மட்டுமே இதில் ஹைலைட்டாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+