இது ஒரு தொடர் கதை.. அன்று நித்தியானந்தா ஓடினார்.. சிக்கினார்.. இன்று அதே பாணியில்.. சிவசங்கர் பாபா!
சென்னை: நித்யானந்தா எப்படி பாலியல் குற்றச்சாட்டிற்கு அஞ்சி ஹிமாச்சலில் தப்பிச் சென்ற போது கைது செய்யப்பட்டாரோ அதே போல் பாலியல் புகாருக்குள்ளான சிவசங்கர் பாபாவும் காசியாபாத் அருகே போலீஸார் துரத்தி சென்று பிடித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரேமானந்தா, நித்யானந்தா உள்ளிட்டோர் தனக்கென ஒரு பெண் பக்தர்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டு அவர்களை மயங்க வைத்து தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொண்டு பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொண்ட சம்பவம் பட்டபரிவர்த்தனமாக தெரிந்தது.
அந்த வரிசையில் பாலியல் புகாரில் மற்றொரு சாமியாரான சிவசங்கர் பாபா ஈடுபட்டுள்ளார். நித்யானந்தாவை போல சிவசங்கர் பாபாவும் வெளிமாநிலத்திற்கு தப்பி சென்ற போது அங்கு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவங்களின் பின்னணி குறித்து பார்ப்போம்.

வீடியோ
முதலில் நித்யானந்தா, கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி தமிழ் தொலைகாட்சி ஒன்றில் ஒரு வீடியோ படம் ஒளிபரப்பானது. அதில் நித்யானந்தாவும் தமிழ் நடிகையும் அந்தரங்கமாக இருப்பது போன்ற காட்சிகள் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.

ஹிமாச்சல் பிரதேசம்
இதையடுத்து போலீஸார் இவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை சந்திக்க விரும்பாத நித்யானந்தா தலைமறைவானார். அவரை போலீஸார் தீவிரமாக தேடிவந்த நிலையில் அவரை அதே ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி ஹிமாச்சல் பிரதேசத்தில் அர்கி என்ற இடத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

பாலியல் துன்புறுத்தல்
இவ்வாறு நிறைய ஆசிரமங்களை ஏற்படுத்தி அங்கெல்லாம் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாக புகார்கள் உள்ளன. இன்றும் அவர் மீதான புகாரில் கைது செய்ய போலீஸார் தேடி வருகிறார்கள். ஆனால் அவரோ கைலாசா எனும் நாட்டில் இருந்து கொண்டு உதார் விட்டு வருகிறார்.

கடவுள்
நித்யானந்தாவை போலவே சிவசங்கர் பாபாவும் தன்னை கடவுள் எனக் கூறி கொண்டு தன் பள்ளியில் படிக்கும் பிஞ்சு மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. ஆனால் போக்சோ சட்டம் பாய்ந்ததை அடுத்து இவர் சென்னையைவிட்டு உத்தரகாண்ட் மாநிலம் சென்றார். அங்கு டேராடூனில் இருந்து மருத்துவமனையில் இருந்த பாபா, போலீஸார் வருவதை அறிந்து தப்பியபோது உ.பி.- டெல்லி இடையே காசியாபாத் அருகே துரத்தி சென்று பிடிபட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications