பிரசாந்த் கணிப்பு வைத்த ஆப்பு; ஆடிப்போன நிதிஷ்! என்னது 5 சீட் கூட வராதா?
சென்னை: பாஜக உடனான நிதிஷ்குமாரின் கூட்டணி குறுகிய காலம்தான் நீடிக்கும் என்றும், வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அது நீடிக்காது என்றும் தேர்தல் யுக்திகளை வகுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து, பீகாரின் 9வது முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார்.
காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பீகார்தான். அங்குள்ள பாட்னாவில்தான் 'இந்தியா' கூட்டணியின் முதல் கூட்டம் நடைபெற்றது.

அப்போது அதில் நிதிஷ்குமாரின் ஜனதா தளம் அங்கம் வகித்தது. அதேபோல் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் பங்கு வகித்தது. ஆகவே, பீகாரைப் பொறுத்தளவில் பாஜக கூட்டணிக்கு மிகப் பெரிய சவால் காத்திருப்பதாகப் பலரும் பேசிவந்தனர்.
திடீரென்று மம்தா பானர்ஜி 'இந்தியா' கூட்டணியிலிருந்து விலகித் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து ஆம் ஆத்மி விலகியது. இதில் உச்சக்கட்டமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்.
இதனால், ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியத்தை அளித்தார் நிதிஷ். அடிக்கடி இப்படி அணி மாறுவதால், ஊடகங்கள் நிதிஷ்குமாரைப் பல்டி நாயகன் எனப் பெயரிட்டு அழைக்கத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் யுக்திகளை வகுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர், பாஜக உடனான நிதிஷ்குமாரின் புதிய கூட்டணி குறித்து சில வலுவான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பீகார் மக்களை ஏமாற்றி வரும் நிதிஷ்குமாரைத் தந்திரமானவர் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல் வரை பாஜகவுடனான இந்தப் புதிய கூட்டணி நீடிக்காது என்றும் தெரிவித்துள்ளார். அடுத்து வரப்போகும் மாநிலத் தேர்தலில் நிதிஷ்குமார் யாருடன் போட்டியிட்டாலும் பரவாயில்லை.
அவரது கட்சி 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று அடித்துக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரசாந்த் கிஷோர், "அடுத்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுவிட்டால். நான் எனது பணியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்.
இதை அப்படியே எழுதுங்கள்" என்று சவால் விட்டுள்ளார். "விரைவில் பீகார் மக்கள் நிதிஷ்குமாருக்கு வட்டியுடன் திருப்பித் தருவார்கள்.

தற்போதைய பீகார் வரை படத்தில், இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு புறம் நிதிஷ்குமார் முகம் கூடவே பாஜகவால் ஆதரிக்கப்படும் முகம். மறுபுறம், ஆர்ஜேடி மற்றும் பிற கட்சிகள் உள்ளன.
இந்தக் கூட்டணியில் பீகார் சட்டசபைத் தேர்தல் நடக்காது. அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு முன், பல அதிரடியான மாற்றங்கள் காத்திருக்கின்றன. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இன்னும் ஆறு மாதங்களுக்குள், அந்த மாற்றங்களை மக்கள் காண்பார்கள் "என்றார் பிரசாந்த் கிஷோர்.
"கடந்த ஒரு வருடமாக எனது கருத்துகளை நீங்கள் கவனித்திருந்தால் ஒரு உண்மை உங்களுக்குப் புரிந்திருக்கும். நிதிஷ்குமாரை எப்போது வேண்டுமானாலும் கூட்டணியை விட்டு விலகலாம் என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரே நபர் நான் மட்டும்தான்.

அதை எனது அறிக்கைகளே சொல்லும். ஆனால், நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரும் 'பல்தூரம்' போட்டிக்குப் போட்டியிட முடியும் என்பது இன்றைக்கு நிரூபணமாகியுள்ளது" எனக் கிண்டலடித்துள்ளார் பிகே.
பீகாரில் உள்ள 'மகாகத்பந்தனா' கூட்டணியில் நிதீஷ் குமார் தொடர மாட்டார் என்றும், அவ்வாறு தொடர்ந்தால் மக்களவைத் தேர்தலில் அவருக்கு 5 இடங்கள் கூட கிடைக்காது என்றும் முந்தைய கருத்துக் கணிப்பை பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டிருந்தார்.

"எனது கணிப்புக்குப் பிறகு அவர்கள் பயந்து, மஹ்கத்பந்தனா கூட்டணியை விட்டு வெளியேறி இருக்கிறார். என் அடுத்த கணிப்பை இப்போது சொல்கிறேன். நிதிஷ்குமாரின் கட்சி மாநிலச் சட்டசபைத் தேர்தலில் 20 இடங்களுக்கு மேல் பெறாது" என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் கிஷோர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications