நகர மறுக்கிறது.. எங்க போய் நிக்குது பாருங்க நிவர்.. திருவண்ணாமலையில் விடாமல் சுழன்று அடிக்கும் புயல்
சென்னை: தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்து விட்டாலும் இன்னும் முழுமையாக புயல் தமிழகத்தை விட்டு செல்லவில்லை.
Recommended Video
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய நிவர் புயல்.. ஒருவழியாக கரையை கடந்துள்ளது. நேற்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது.
இந்த புயல் அதிதீவிர புயலாக நேற்று மதியம் உருவெடுத்தது. நேற்று புயல் கரையை கடக்கும் போது 143 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

எங்கு
இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிவர் புயல் மரக்காணம் அருகே கரையை கடந்தது. புதுச்சேரி - மரக்காணம் பகுதிக்கு இடையில் நிவர் புயல் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்து விட்டாலும் இன்னும் தமிழகத்தை விட்டு முழுமையாக செல்லவில்லை.

நகரவில்லை
இந்த புயல் தொடக்கத்தில் இருந்தே பல இடங்களில் நின்று நின்றுதான் பயணம் செய்தது. வங்கக்கடலில் நேற்று முதல் நாள் 4 மணி நேரம் ஒரே இடத்தில் இந்த புயல் நிலை கொண்டது. அதேபோல் தற்போது தமிழகத்தில் இருந்தும் புயல் வெளியேற மறுக்கிறது.

மறுக்கிறது
தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்து விட்டாலும் இன்னும் முழுமையாக புயல் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. தற்போது திருவண்ணாமலையில் புயல் மையம் கொண்டு உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து புயல் நகர மறுக்கிறது.

ஆனால் என்ன
இந்த புயல் காரணமாக திருவண்ணாமலையில் தற்போது தீவிர மழை மற்றும் காற்று அடித்து வருகிறது. இந்த புயல் காரணமாக அங்கு சேதம் அதிகம் ஆக வாய்ப்பு உள்ளது. ஆனால் நிவர் புயல் வலிமை இழந்துவிட்டது. இந்த புயல் கடந்த பின்பும் 6 மணி நேரம் தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் கூறியது.

வலிமையே இல்லை
தற்போது அதேபோல் புயலின் தாக்கம் நீடிக்கிறது. நிவர் புயல் அதி தீவிர புயலில் இருந்து தீவிர புயலாக மாறி, தற்போது சாதாரண புயலாக மாறி உள்ளது. இந்த புயல் ஆந்திரா நோக்கி செல்ல வேண்டும். ஆனால் இன்னும் சில மணி நேரம் திருவண்ணாமலையில் இப்படியே நிற்க வாய்ப்புள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications