Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“காது, மூக்குல நகை போட்டு வந்தா ரூ.1000 இல்ல”.. கிண்டல் செய்த அமைச்சர்! கலகலவென சிரித்த மூதாட்டிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என தன்னிடம் முறையிட்ட மூதாட்டிகளிடம் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், "காது, மூக்குல எல்லாம் இப்படி நகை போட்டு வந்தா குடுக்க மாட்டோம்" என கிண்டலாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படி, திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, தமிழகத்தில் உள்ள தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.

No 1000 If You Wear Jewelry Minister KKSSR Ramachandran s Comment Sparks Row

இந்தத் திட்டத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது, 1.14 கோடி குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறாதவர்கள், ஏற்கெனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விரைவில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த நிலையில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை கோரி சுமார் 15 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களின் மீதான பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான விவரம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் தெரிவிக்கப்பட உள்ளது. இதில், தகுதி வாய்ந்த விண்ணப்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் அடுத்த மாதம் முதல் ரூ.1000 வரவு வைக்கப்படும் எனத் தெரிகிறது.

இதில், இரண்டாம் கட்டமாக விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோனோருக்கு ரூ. 1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் தற்போது தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என தன்னிடம் முறையிட்ட மூதாட்டிகளிடம் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், "காது, மூக்குல எல்லாம் இப்படி நகை போட்டு வந்தா குடுக்க மாட்டோம்..." என கிண்டலாக கூறியுள்ளார். அமைச்சர் சொன்னதைக் கேட்டு மூதாட்டிகள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+