உடன்பாடு எட்டப்படவில்லை.. சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது: சிஐடியூ
சென்னை: வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர 'சாம்சங்' நிறுவன தொழிலாளிகள் - அதிகாரிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனவும் போராட்டம் தொடரும் எனவும் சிஐடியூ தொழிற்சங்கம் கூறியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள சிப்காட்டில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சாம்சங் நிறுவனத்தின் பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சாம்சங் நிறுவனத்தில், சுமார் 1800 பேர் நிரந்தர தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்த தொழிற்சாலையில், சங்கம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 ஆம் தேதி போரட்டம் தொடங்கியது. சுமார் 1,200 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், சாம்சங் நிறுவனத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 'சாம்சங்' ஆலை நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, சி.வி.கணேசன் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இதன்படி, சுங்குவார்சத்திரத்தில் உள்ள சிப்காட் அலுவலகத்தில் 'சாம்சங்' நிறுவன அதிகாரிகள், தொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சார்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து இரு தரப்பினரும் சென்னை தலைமை செயலகத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், சாம்சங் நிறுவனம் 14 கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டுள்ளதாகவும், தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக அமைச்சர்கள் கூறுகையில், "சாம்சங் நிர்வாக தரப்பினரும் சில கோரிக்கைகளை மறுத்தனர். நாங்கள் அறிவுறுத்தியதன் பேரில் 14 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அறிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால் ஏசி பேருந்துகள் ஐந்துதான் இருந்தது. இதில், 108 பேருந்துகளிலும் ஏசி பஸ்களாக மாற்றுவதாக உறுதி தந்து இருக்கிறார்கள். தொழிலாளர்கள் யாரேனும் இறந்தால் உடனடியாக ஒரு லட்ச ரூபாய் தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
அதுமட்டும் இன்றி சம்பளம் இந்த மாதத்தில் இருந்து 5 ஆயிரம் உயர்த்தி தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அதனால், நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், நாளையில் இருந்து பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது எனவும் இதனால் நாங்கள் தலையிட வில்லை என்றும் அமைச்சர் தாமோ அன்பரசன் கூறினார்.
இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக வெளியான தகவலை மறுத்து சாம்சங் இந்தியா சிஐடியூ தலைவர் முத்துக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது.
அமைச்சர்கள் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. உடன்பாடு ஏற்பட்டதாக ஊடகங்களில் வரும் தகவல் உண்மைக்கு மாறானது. சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு பெரும்பாலான தொழிலாளர்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்லாமல் இந்த போராட்டத்தை திசை திருப்பும் செயல் ஆகும். இதை சிஐடியு தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications