அதிமுகவுடன் இனி கூட்டணியா? வேற ஒருத்தரை கொண்டு வந்து வச்சுக்கோங்க.. பாஜக அண்ணாமலை அதிரடி
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தனித்தனியாக போட்டியிட்ட அதிமுக, பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. கூட்டணி வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில், 2026 ல் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
நாட்டின் 18 வது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தேசிய அளவில் 240 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் பிரசாரத்தின் போது 400 இடங்களை பெறுவோம் என்று கூறி வந்த பாஜக தலைவர்களுக்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியை அளித்தது.

இதேபோல் தமிழகத்திலும் பாஜக வளர்கிறது, தமிழக மக்கள் பாஜகவுக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்று பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் பேசி வந்த நிலையில், இங்கும் பாஜகவுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கோவையில் போட்டியிட்டு தோற்று போனார். திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று கிளீன் ஸ்வீப் செய்தது. இதேபோல் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், மத்திய யார் ஆட்சி செய்வார்கள் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் அதிமுக இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூறி வந்த நிலையில் அவர்களுக்கும் தேர்தல் முடிவு அதிர்சியையே கொடுத்தது.
இந்த நிலையில் நடந்த முடிந்த லோக்சபா தேர்தல் அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு இருந்தால் நிறைய இடங்களில் வெற்றி பெற்று இருக்கும் என்றும் அதிமுக தலைவர்கள் தெரிவித்து வந்தனர். இதுட் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை கூறியதாவது:-
"யார் அரசியலுக்கு வந்தாலும் புதியவர்களுக்கு தமிழக மக்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். 2026-ஐ பொறுத்தவரையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி. 2026 கூட்டணி ஆட்சி தான் அமையும் நான் சொல்வதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் ஒரு சுமார் 500, 550 நாட்கள் உள்ளது. 2026ல் முதன் முதலாக ஒரு முழுமையான கூட்டணி ஆட்சியை பார்க்க போகிறோம்" என்றார்.
அப்போது செய்தியாளர்கள் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அண்ணமாலை, "நான் பேசுவதை பார்த்தால் அப்படி தெரியுதா?.. இன்னொருவரை கொண்டு வந்ததுதான் நீங்கள் கூட்டணி வைக்க வேண்டும்" என்றார்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் தலைவர்கள் பற்றி விமர்சிக்கும் வகையில் பேசியதாக பிரச்சினை எழுந்தது. இதையடுத்து பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறியது.
இதையடுத்து பாஜக மேலிடம் அதிமுகவை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க முயற்சித்தும் எடப்பாடி அதற்கு பணியவில்லை. இதையடுத்து தான் அதிமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தது. பாஜகவும் டிடிவியின் அமமுக, ஓபிஎஸ், பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எனினும் பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது.
தனித்தனியாக போட்டியிட்ட காரணத்தால் தான் அதிமுக, பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை என்றும், கூட்டணி வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில் அண்ணாமலை இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்?












Click it and Unblock the Notifications